'பிகில்' புகழ் காயத்ரி ரெட்டிக்கு நிச்சயம் ஆகிடுச்சு.. மணப்பெண்ணாக வெட்கப்படும் அழகே தனி தான்!
சென்னை: பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி சத்தம் காட்டாமல் தனது நிச்சயதார்த்தத்தை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளார்.
மாப்பிள்ளை உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இந்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
கவினின் லிஃப்ட் படத்தில் பேயாக நடித்த இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

பிகில் நடிகை
2016ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கடைசி சுற்று வரைக்கும் வந்தவர் மாடல் அழகி காயத்ரி ரெட்டி. கடந்த 2019ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் மாரி எனும் கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரங்கனையாக சினிமாவில் அறிமுகமானார்.

லிப்ட் பேய்
பிகில் படத்தை தொடர்ந்து இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா அய்யர் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் பேயாக நடித்திருந்தார். பிளாஷ்பேக்கில் இவர் நடிப்பு அசத்தலாக இருந்தது. மாடல் அழகியான இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சர்வைவர் காயத்ரி
லிப்ட் படத்தைத் தொடர்ந்து ஜீ தமிழில் அக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். மூன்றாம் உலகத்தில் அதிக நாட்கள் இருந்தும் கலக்கினார் காயத்ரி. ஆனால், கடைசி வரை அவரால் அங்கே சர்வைவ் பண்ண முடியாமல் வெளியேறினார்.

நிச்சயம் ஆகிடுச்சு
தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார் காயத்ரி ரெட்டி. கடந்த ஏப்ரல் 29ம் தேதி காயத்ரி ரெட்டிக்கு நிச்சயம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்களை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புதிய தொடக்கம் என பதிவிட்டுள்ளார்.

இறுதி வரை நீயும் நானும்
கையோடு கைக்கோர்த்து.. நீயும் நானும் இறுதி வரை இப்படியே இருக்க வேண்டும் என் அன்பே என ஹார்ட்டின் எல்லாம் போட்டு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார் காயத்ரி ரெட்டி. காயத்ரி ரெட்டிக்கு நிச்சயம் நடந்ததை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெட்கத்தை பாருங்களேன்
மணமகனுடன் மாலையும் கழுத்துமாக பட்டுப் புடவை அணிந்து நிற்கும் காயத்ரி ரெட்டி சந்தோஷத்தில் வெட்கப்பட்டு தனது முகத்தை வருங்கால கணவர் மேல் சாய்த்து நிற்கும் புகைப்படம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்போதும் போல எப்போதும் சந்தோஷமாக இப்படியே இருங்க காயத்ரி என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











