பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் மாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தனது குடும்ப வாழ்க்கை பற்றியும் நண்பர்கள் பற்றியும் ஏகப்பட்ட விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார்.
லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நான் ரொம்ப செல்ஃபிஷ் என அந்த வீடியோவுக்கு டைட்டிலே வைத்து அதற்குள் அவர் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள காயத்ரி ரெட்டி சினிமாவுக்கு மொத்தமாக குட் பை சொல்லியுள்ளார். யூடியூப் சேனலில் அவர் வெளியிடும் வீடியோக்களை ரசிகர்கள் அதிகம் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
காயத்ரி ரெட்டி நடித்த படங்கள்: பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் இவர்தான் பேயாக நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சிகளில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான ஷிக்கரு படத்திலும் இவர் நடித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ: ஜீ தமிழில் ஒளிபரப்பான அர்ஜுன் தொகுத்து வழங்கிய தமிழ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரெட்டி 43-வது நாளில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிகில் தீபாவளி, ரன் பேபி ரன் போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் செட்டில்: சினிமாவில் பெரியளவில் ஷைன் ஆவார் காயத்ரி ரெட்டி என நினைத்துக் கொண்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு நிஷாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகிறார். தனது கணவருடன் பல ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த காயத்ரி ரெட்டி தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பீரியட்ஸ் நேரத்தில்: மாதவிடாய் காலத்தில் காபி குடிக்க மாட்டேன். அப்படி குடித்தால் அது எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும். அந்த நேரத்தில் எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவுட் ஆகிவிடும். பீரியட்ஸ் முடிந்து நான்கு நாள் கழித்து தற்போது காபி குடிக்கிறேன் என தனது புதிய வீடியோவில் கூறியுள்ள காயத்ரி ரெட்டி அந்த நேரத்தில் ஏதாவது குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ மட்டுமே குடிப்பேன் எனக்கூறியுள்ளார். மேலும், கஃபைன் அதிகம் உள்ளதால் மாதவிடாய் காலத்தில் யாரும் காபி குடிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
நான் ரொம்ப செல் ஃபிஷ்: ஆனால், இந்த வீடியோ என்னுடைய பீரியட்ஸ் பற்றியது அல்ல நான் ரொம்ப செல்ஃபிஷ் என என் அம்மா அடிக்கடி சொல்வாங்க, ஆமாம் அது உண்மை தான் என்பதை சொல்லத்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
மோசமான ஃப்ரெண்ட்ஸ்: மேலும், தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ரொம்பவே மோசமானவர்கள் என்றும் வெட்டி பந்தா ஓவர் சீன் போடுவதால் அவர்களை எல்லாம் கட் பண்ணிட்டேன். அப்பா காசுல கார் வாங்குறது, அப்பா காசுல ஊர் சுத்துறதுன்னு இருப்பாங்க, என் அளவுக்கு அவர்கள் யாரும் முன்னேறவில்லை. அப்படியே இன்னமும் குழந்தைகள் போல நேரத்தை வீணடித்து வருகின்றனர். நான் இன்னைக்கு ஆஸ்திரேலியாவில் நல்லா வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனால், பலர் இன்னமும் 10 வருஷத்துக்கு முன்னாடி எந்த நிலைமையில இருந்தாங்களோ அதே நிலைமையில தான் இன்னமும் இருக்காங்க.. அதனால் பலருடைய நட்பை துண்டித்து விட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும், தனது தோழிகள் எல்லாம் பலருடன் உறவு வைத்துக் கொண்டு இதுதான் சந்தோஷமான வாழ்க்கை என நினைத்துக் கொள்கின்றனர் என்றும் திடுக்கிட வைத்துள்ளார் காயத்ரி ரெட்டி.


Click it and Unblock the Notifications











