பிகில் அப்டேட்: செப்டம்பரில் இசை வெளியீடு - தடபுடல் ஏற்பாடு தயார்
சென்னை: அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய், நயன் தாரா நடிக்கும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுவருகிறது என சினிமா வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கமர்ஷியல் வெற்றி பெற்ற தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ-விஜய் ஜோடியில் உருவாகிவரும் அடுத்த திரைப்படம் "பிகில்". இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளன்று பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் போஸ்டர்களை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய்.
வட சென்னை தாதாவாக அப்பா கதாபாத்திரத்திலும், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக மகன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் விஜய். பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதால் இப்படம் பெண்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில்
சமீப காலமாக பெண்கள் விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்து வருகின்றனர். கடந்த வாரம் வெளியான கென்னடி கிளப் படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதேபோல் பெண் ரசிகர்களை கவரும் வகையில் தற்போது பிகில் படமும் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பெண்ணே
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிங்கபெண்ணே பாடல் படு ஹிட்டாகி உள்ளது. இப்பாடலை இதுவரையிலும் 1.35 கோடி பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாகவும், வேகமாகவும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

செப்டம்பரில் இசை ரிலீஸ்
இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி என இரண்டு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு தேதியை முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இசை வெளியாவதற்கு முன்னரே யூடியூபில் சாதனை படைத்துள்ளதால் விஜய் ரசிகர் மத்தியில் இப்படத்தின் இசையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் நயன்தாரா ஜோடி
பிகில் படத்தை ஏ.ஜி.எஸ்.கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர விவேக், கதிர், தேவதர்ஷினி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











