காலா போஸ்டருக்கும் பிகில் போஸ்டருக்கும் இதுதான் வித்தியாசம்! லைட்டா பட்டி டிங்கரிங் தானா? #Bigil

சென்னை: விஜய் நடிக்கும் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அது நடிகர் ரஜினிகாந்த நடித்த காலா படம் போஸ்டரை போல் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் 63வது படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். ஏற்கனவே விஜய் - அட்லி கூட்டணி தெறி, மெர்சல் என இரண்டு படங்களை கொடுத்து ஹிட்டாகியது.

இந்நிலையில் இந்த கூட்டணி விஜயின் 63வது படத்திலும் இணைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் படத்தின் பெயர் பிகில் என தெரியவந்துள்ளது.

எற்கனவே பார்த்த போஸ்டர்

எற்கனவே பார்த்த போஸ்டர்

இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
அப்பாவாக ஒரு விஜயும் மகனாக ஒரு விஜயும் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் ஏற்கனவே பார்த்த போஸ்டர் போன்று உள்ளதாக கூறப்படுகிறது.

காலா போஸ்டரை போன்று

காலா போஸ்டரை போன்று

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் போஸ்டரை போன்றே இருப்பதாக கூறப்படுகிறது. காலா படத்தில் ரஜினிகாந்த் காவி வேட்டியில் கருப்பு நிற ஜீப்பில் அமர்ந்திருப்பார்.

விஜயும் காவி வேட்டி

விஜயும் காவி வேட்டி

அதை போலவே நடிகர் விஜய் கறிக்கடையில் நட்ட நடுவில் நாற்காலி போட்டு காவி வேட்டியில் அமர்ந்துள்ளார். ரஜினி கால் மேல் கால் போட்டிருப்பார், இதில் விஜய் ஒருக்காலை கறிக்கட்டையின் மீதும் மற்றொரு காலை தரையிலும் வைத்துள்ளார்.

நாற்காலியில் பேலன்ஸ்

நாற்காலியில் பேலன்ஸ்

காலா போஸ்டரில் ரஜினிகாந்த் ஒரு கையை காலில் பேலன்ஸ் செய்திருப்பார். பிகிலில் விஜய் நாற்காலியின் கைப்பிடியில் பேலன்ஸ் செய்துள்ளார்.

பட்டி டிங்கரிங்

பட்டி டிங்கரிங்

காலா போஸ்டரில் சிறிது பட்டி டிங்கரிங் செய்து பிகில் என வெளியிட்டுவிட்டார் அட்லி என டிவிட்டரில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். பிகில் ஃபர்ஸ்ட் லுக்குக்காக கடந்த 3 நாட்களாக டிவிட்டரில் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி பிஸியாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: vijay bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X