ட்விட்டரில் புள்ளிங்கோ ராவடி.. ஒரே நேரத்தில் 4 டிரெண்டிங்!
Recommended Video
சமூக வலைதளமான ட்விட்டரை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டார்களோ புள்ளிங்கோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியளவில் போடுறா வெடிய, வெறித்தனம், பிகில் எமோஜி, தளபதி 63 என 4 டிரெண்டிங்கை ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை: இந்திய அளவில் சமூக வலைதளமான ட்விட்டரில் 4 டிரெண்டிங்கை விஜய் ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.
போடுறா வெடிய, வெறித்தனம், பிகில் எமோஜி, தளபதி 63 என்ற ஹேஷ்டேகுகளில் இந்த டிரெண்டிங் தற்போது வைரலாகி வருகிறது.
பிகில் எமோஜி நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது ஆக்டிவேட் ஆன சந்தோஷத்தில் தான் இப்படி ட்விட்டரை ஆட்சி செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

போடுறா வெடிய
ட்விட்டர் டிரெண்டிங்கில் தற்போது இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது போடுறா வெடிய ஹேஷ்டேக் தான். தபாங் 3 டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்த ஹேஷ்டேகை பின்னுக்குத் தள்ளி போடுறா வெடிய முதலிடம் பிடித்துள்ளது.

வெறித்தனம்
பிகில் எமோஜி ஆக்டிவேட்டான நிலையில், பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வகையில் வரும் அக்டோபர் 25ம் தேதி பிகில் படம் வெறித்தனமாக வெளியாகும் மற்ற எல்லா பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் முறியடிக்கும் என புள்ளிங்கோ அந்த ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய அளவில் அந்த ஹேஷ்டாக் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தளபதி 63
பிகில் தலைப்பு வெளியாவதற்கு முன்பு வரை விஜய் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வந்த தளபதி 63 ஹேஷ்டேகை மீண்டும் டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் கடந்து பிகில் சொன்ன தேதிக்கு வெளியாகும் என நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

பிகில் எமோஜி
இந்த எமோஜி தான் இன்றைய விஜய் ரசிகர்களின் வெறித்தனமான டிரெண்டிங் வேட்டைக்கே காரணம். ஆனால், இந்த ஹேஷ்டேக் தபாங் 3 டிரைலர் மற்றும் வெட்னஸ்டே விஸ்டம் ஹேஷ்டேகுகளை தொடர்ந்து 6ம் இடத்தில் இருக்கிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்திற்கு எமோஜி கிடைத்துள்ளது. ஃபுட்பாலுடன் பிகில் விஜய் இருக்கும் லுக் தான் எமோஜியில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











