பிகில் தென்றலாக தான் அனைவராலும் பார்க்கபடுகிறேன் -அம்ரிதா
சென்னை : பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .அதில் விஜய் வழிநடத்தும் கால்பந்து அணியில் நடிகை இந்துஜா ,அம்ரிதா,ரெபா மோனிகா ஜான் ,நடிகர் ரோபோ சங்கர் மகள்(இந்திரஜா சங்கர்) இவர்களுடன் சில அறிமுக நடிககைகளும், கால்பந்து வீராங்கனைகளும் அணியில் இடம் பெற்றனர் .இதில் பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த 'அம்ரிதா' நெட்டிசன்களால் கொண்டாட பட்டுவருகிறார் .
அம்ரிதா தனது சினிமா கனவை குறும்படங்கள் நடிப்பதில் இருந்து துவங்கினார் . மாடலிங் குறும்படங்கள் என்று முன்னேறி கொண்டிருந்த அம்ரிதாவுக்கு தற்போது கோமாளி படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக சினிமாவில் நுலைந்திருக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கனாதனின் குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது . அந்த குறும்படம் பல லட்சம் மக்களால் பார்வையிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது .அந்த குறும்படத்தை இதுவரை 24லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் .

அதற்கு பிறகு அம்ரிதாவுக்கு க்ரீத்திகா உதயநிதி இயகத்தில் விஜய் ஆன்டனி நடிப்பில் உருவான காளி படத்தில் வாய்ப்பு கிடைத்தது .அதில் நான்கு வகையான கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருப்பார் அதில் ஒரு கதாபாத்திரத்தின் ஜோடியாக 80களில் நடக்கும் கதையில் அம்ரிதா நடித்திருப்பார்.
இதன் பிறகு பாடகர் விஜய் யேசுதாஸ் மாரி படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார் . அதையடுத்து அவர் படைவீரன் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் கதாநாயகியாக அம்ரிதா நடித்திருந்தார் .

அதன் பிறகு தற்போது பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இருக்கும் அம்ரிதா ,பலரால் நான் தென்றல் என்றே அழைக்கபடுகிறேன் இந்த வாய்பை அளித்த அட்லிக்கே நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்று இருக்கிறார்.
தென்றல் எனும் அம்ரிதா தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருவதாக தெரிகிறது. அவரின் திறமையால் அவர் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











