டிரெண்டிங் கிங்.. இந்தியளவில் டிரெண்டாகும் பிகில் ஹேஷ்டேகுகள்!

இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்ட் செய்ய வேண்டும் என்பது விஜய் ரசிகர்களுக்கு சர்வசாதாரணமாக போய் விட்டது. பிகில் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், காலையிலிருந்தே BigilFDFS, BigilReview ஹேஷ்டேகுகள் இந்தி

Recommended Video

‘Bigil’ movie review | சும்மா வேற லெவல் வெறித்தனம் !

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று காலை வெளியானதில் இருந்தே இந்தியளவில் பிகில் குறித்த ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.

பிகில் படத்தில் வயதான கதாபாத்திரமான ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதை பாராட்டி இணையத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிகில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என அஜித் ரசிகர்களும் ட்விட்டரில் சண்டையிட்டு வருகின்றனர்.

எப்படி இருக்கு?

எப்படி இருக்கு?

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கான ஸ்பெஷல் ட்ரீட்டாக பிகில் படம் வெளியாகி உள்ளது என்றே சொல்லலாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 55 நிமிடம் என்பது மட்டுமே கொஞ்சம் அதிகமாக தெரிவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றபடி மாஸ், மசாலா, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் அட்லி.

எத்தனை விஜய்

எத்தனை விஜய்

விஜய் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் இணையத்தில் மொத்தம் எத்தனை விஜய் என்பதை போட்டுடைத்து விட்டனர். எதிர்பார்த்தபடியே படத்தில் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரண்டு விஜய் தான். மைக்கேலின் பிளாஷ்பேக் தான் பிகில் என்பது ஊகிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், திரையில் அதற்கான மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார் அட்லி என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்கான வலிமையை சேர்த்துள்ளார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

பிகில் படத்தின் ட்விட்டர் எமோஜி இரு தினங்களுக்கு முன்பு வந்தது. அன்றைய தினமே இந்தியளவில் 4 ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்து விஜய் ரசிகர்கள் மிரட்டி வந்தனர். படம் வெளியாகியுள்ள இன்று மட்டும் சும்மாவா விட்டு விடுவார்கள், BigilReview மற்றும் BigilFDFS என இரு ஹேஷ்டேகுகளை உருவாக்கி சுமார் ஒரு லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் போட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

100 கோடி

100 கோடி

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று விஜய்யின் பிகில் படம் வெளியாகி இருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டு பிகில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் இந்த தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளியாகாததால், பிகில் படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X