200 கோடி கிளப்பில் பிகில்.. ட்விட்டரை தெறிக்கவிடும் புள்ளிங்கோ!
பிகில் திரைப்படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், இந்தியளவில் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
சென்னை: விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிகில் திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு, இந்தியளவில் BigilHits200CRs ஹேஷ்டேகை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் பிகில் திரைப்படம் 85 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போடுறா வெடிய
பிகில் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 200 கோடி வசூல் வரை பலமுறை இந்தியளவில் அதன் ஹேஷ்டேகுகளை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ள பிகிலின் வெற்றியை பார்த்து போடுறா வெடிய என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

எகிப்தில் பிகில்
இதுவரை எந்தவொரு தமிழ் படமும் எகிப்து நாட்டில் வெளியாகாத நிலையில், முதல்முறையாக விஜய்யின் பிகில் திரைப்படம் எகிப்தில் இன்று வெளியாகியுள்ளது. இதன்மூலமாக பிகில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் பிகில் திரைப்படம் எகிப்தில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக்
மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து மூன்று தீபாவளிக்கும் வெளியான விஜய் படங்கள் 200 கோடி கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் அடித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ஹேட்டர்ஸ்களுக்கு 200 கோடி வசூல் மூலம் இயக்குநர் அட்லி மற்றும் விஜய் பதிலளித்துள்ளனர் என ட்விட்டர் சண்டையும் ஒருபுறம் நடந்து வருகிறது.

இந்தியளவில் டிரெண்டிங்
இந்தியளவில் டிரெண்டிங் செய்வது என்றால் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் கை வந்த கலையாக மாறிவிட்டது. வெகு விரைவாக 44 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்களை போட்டு இந்தியளவில் #BigilHits200CRs என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். பாலிவுட் பிரலமான கரண் ஜோஹர், பிகில் படத்தையும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லியை பாராட்டி இன்று ட்வீட் பதிவிட்டுள்ள நிலையில், அவரது பதிவை குறிப்பிட்டும் இந்தியளவில் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என புள்ளிங்கோ கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











