சூர்யாவுக்கு தங்கையாகும் பிகில் வேம்பு.. யாருடைய படத்தில் தெரியுமா?
சென்னை : கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் திறமை மிக்க இளம் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை இந்துஜா
இப்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் சூர்யாவுக்கு தங்கையாக புதிய திரைப்படத்தில் இந்துஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

துடிப்பான நடிப்பு
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஹீரோவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்ற இவருக்கு அடுத்ததாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. அந்தவகையில் மெர்குரி ,பில்லா பாண்டி,சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

சிறப்பு தோற்றத்தில்
கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் சிறப்பு தோற்றத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப் படத்தில் சில காட்சிகள் மட்டுமே தோன்றும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார். நயன்தாரா இந்த படத்தில் அம்மனாக நடித்திருக்க காமெடி கலந்த குடும்ப படமாக வெளியான மூக்குத்தி அம்மன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது.

பிகில் வேம்பு கதாபாத்திரம்
அட்லி,விஜய் இணையும் திரைப்படங்கள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான். விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் கவர்ந்து வருகிறது அந்த வகையில் அட்லி, விஜய் கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி வெளியானது. இந்த படத்தில் பெண் கால்பந்தாட்ட வீரராக இந்துஜா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் மிகவும் துடிப்புடன் நடித்திருப்பார். வேம்பு கதாபாத்திரம் இவரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. நடிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் தான் ஒரு சிறந்தவர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருப்பார்.

சூர்யாவுக்கு தங்கையாக
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி மற்றும் தனுஷுடன் இணைந்து நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இந்துஜா சூர்யாவுக்கு தங்கையாக நடிக்க புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தை சூர்யாவே தனது சொந்த தயாரிப்பின் மூலம் தயாரிக்க உள்ளார். பாலா மற்றும் சூர்யா ஏற்கனவே நந்தா மற்றும் பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இந்த வெற்றிக் கூட்டணி இப்பொழுது மூன்றாவது முறையாக இணைய உள்ள படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது. அதில் சூர்யாவுக்கு தங்கையாக இந்துஜா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











