அந்த நடிகரோட அம்மா போல ஆகணும்.. ’பிகில்’ நடிகை இந்துஜாவின் பார்வை யார் மேல தெரியுமா?

சென்னை: பிரபல நடிகர் ஒருவரின் அம்மாவை போல தான் ஆகணும் என நடிகை இந்துஜா பதிவிட்டு இருப்பது பலரது பார்வைகளை கவர்ந்திருக்கிறது.

மேயாத மான் படத்தில் தங்கையாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

தொடர்ந்து, மெர்க்குரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

நம்ம வீட்டு பெண்

நம்ம வீட்டு பெண்

வேலூரை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே, மாடலிங்கிலும் பிசியாக இருந்தார். மேயாத மான் படத்திற்கான நேர்காணலுக்கு சென்றிருந்த இந்துஜாவின் நடிப்பு திறமையை அறிந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சுடர்விழி கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்தார்.

இடுப்பழகி

இடுப்பழகி

மேயாத மான், மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமரங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா, இன்ஸ்டாகிராமில் அழகு பொங்கும் போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கி வருகிறார். சமீபத்தில், தனது இடுப்பழகை காட்டி, ரம்யா பாண்டியனுக்கே போட்டி போடும் அளவுக்கு போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கினார்.

முட்டை போண்டா

முட்டை போண்டா

சாப்பாடு விசயம் என்று வந்துவிட்டால், கொஞ்சம் கூட பார்க்காமல் வெளுத்துக் கட்டும் சாப்பாடு பைத்தியம் நம்ம இந்துஜா. லாக்டவுனில், வீட்டில் இருக்கும் நடிகைகள் வித விதமாக உணவு வகைகளையும், கேக்குகள், டல்கோனா காபி என செய்து வந்த நிலையில், சூடான முட்டை போண்டாக்களுடன் பிளேட்டை நீட்டியபடி இந்துஜா வெளியிட்ட போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

81 வயதில்

பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஹாட் மாடல் மற்றும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமனின் அம்மா உஷா சோமன், கடந்த ஜூலை 3ம் தேதி தனது 81வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் புஷ் அப் செய்து ஆரோக்கியமாக இருக்கும் அவரது வீடியோவை மிலிந்த் சோமன் வெளியிட்டு இருந்தார்.

அவங்கள போல

அவங்கள போல

அந்த வீடியோவை பார்த்த நடிகை இந்துஜா, தானும் அந்த வயதில், அப்படி ஆரோக்கியமாக இருக்கணும் என தனது ஆசையை மிலிந்த் சோமன் வெளியிட்டு இருந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட்டாக போட்டிருந்தார். அவரது அந்த கமெண்ட்டை ஆதரித்தும், கலாய்த்தும் நெட்டிசன்கள் பல வித கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X