இது என்ன அட்லீக்கு வந்த சோதனை? சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு! இன்றும் விசாரணை!
Recommended Video
சென்னை: விஜய் நடிப்பில் வெளிவர உள்ள பிகில் படத்திற்கு தடை கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெயிலர் கடந்த 12ஆம் தேதி வெளியானது.
இதனை திருவிழாவை போல கொண்டாடினர் விஜய் ரசிகர்கள். பிகில் படம், இதுவரை விஜய் படம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வியூஸ்களை அள்ளியிருக்கிறது.

கதை என்னுடையது
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கதையை சுட்டுட்டார்
அதில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து அதனை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும், சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்ததாகவும், ஆனால் தற்போது தன்னுடைய கதையை இயக்குனர் அட்லீ இயக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு
இதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே பிகில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அட்லீக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே எதிர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டரால் சர்ச்சை கிளம்பியது. பிகில் படத்திற் கறிக்கடை வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது மொத்தத்துக்கும் வேட்டு வைக்கும் வகையில் கதையே காப்பி என புதிய பிரச்சனை முளைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











