2019ல் உலகத்திலேயே பிகில் தான் அதிக வசூல் – ஹேட்டர்ஸ்க்கு ஆப்பு வைத்த அர்ச்சு!

Recommended Video

Bigil 50th day celebration | ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய்யின் பிகில் கலெக்‌ஷன் குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி வாயே திறக்கவில்லை என ஹேட்டர்ஸ்கள் செய்து வந்த ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அக்கா அர்ச்சனா கல்பாத்தி.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் நேற்று 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடியது.

இந்நிலையில், பிகில் படம் 50வது நாள் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள தருணத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே உலகளவில் அதிக வசூல் சாதனை படைத்தது பிகில் தான் என ட்வீட் போட்டு தளபதி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளார்.

உச்சகட்ட ட்ரோல்

பிகில் படம் 300 கோடி வசூல் ஆனதாக தகவல் வெளியான போது, அது வெறும் பொய் என்றும், அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ் என்ற ஹாஷ்டேக்கை விஜய் ஹேட்டர்ஸ் டிரெண்ட் செய்தனர். ஆனால், அப்போது கூட அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அர்ச்சனா கல்பாத்தி, 50வது நாள் அன்று இந்த ட்வீட்டை போட்டு தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

வெறித்தனம் அக்கா

அர்ச்சனா கல்பாத்தியின் ட்வீட் வந்ததில் இருந்து விஜய் ரசிகர்கள், அவருக்கு நன்றி கூறி வருகின்றனர். இந்த ரசிகர் வெறித்தனம் அக்கா என பிகில் படத்தில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் ஸ்டில்லை பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தேங்க்யூ அக்கா

பிகில் படத்தில் போலீஸ் உடையில் வரும் ரவுடிகளை விஜய் பந்தாடும் போஸ்டரை போட்டு, தேங்க்யூ சோ மச் அக்கா என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

315 கோடி வசூல்

தமிழ்நாட்டில் பிகில் திரைப்படம் 152 கோடி வசூலையும், உலகளவில் 315 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் செய்திருப்பதாக இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

சொல்லத்தான் முடியும்

விஜய்யின் பிகில் படம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் பெற்று முதலிடத்தில் இருப்பதாக ட்வீட் போட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி, எத்தனை கோடி வசூல் என்பதை இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால், சொல்லத்தான் முடியும், காட்டலாம் முடியாது, காட்டுறதுக்கு ஒண்ணுமில்லை என இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.

செம்ம கெத்து

செம்ம கெத்து

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் பெற்றது பிகில் படம் தான் என அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டுக்கு கீழே, பிகில் படத்தில் ராயப்பன் விஜய் செம்ம கெத்தாக வரும் வீடியோ போட்டு தனது நன்றியை இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X