விஜய்க்கு 5வது இடம்.. பிகிலுக்கு 6வது இடம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட புள்ளிங்கோ!

சென்னை: 2019ம் ஆண்டில் இதுதான் நடந்தது என #ThisHappened2019 என்ற ஹாஷ்டேகை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.

இதில், இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களின் பட்டியலில் 5வது இடத்தை நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கம் பிடித்துள்ளது.

அதேபோல, பிகில் ஹேஷ்டேக் அதிகளவில் ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் பிகில் படத்தை தவிர வேறு எந்த இந்திய சினிமாவும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது விஜய் புள்ளிங்கோக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து வருகிறது.

நாலே ட்வீட்

நடிகர் விஜய் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு பிறகு, 2019ம் ஆண்டில் பிகில் படம் குறித்த மொத்தமே நான்கு ட்வீட்களை மட்டுமே போட்டு 2019ம் ஆண்டு மக்களை ட்விட்டர் மூலம் மகிழ்வித்த ஆண் பிரபலங்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

டாப் 10

அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், சல்மான் கான், ஷாருக்கான், விஜய், ஏ.ஆர். ரஹ்மான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், மகேஷ் பாபு மற்றும் அட்லி #ThisHappened2019 ஹாஷ்டேகில் 2019ம் ஆண்டில் டாப் எண்டர்டெயின்மென்ட் லிஸ்டில் இடம்பெற்ற டாப் 10 ஆண் பிரபலங்கள் ஆவார்கள். இதில் பிகில் இயக்குநர் அட்லி, பிகில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிகில் நாயகன் விஜய் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிகிலே

2019ம் ஆண்டில் அதிகளவில் ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக் டாப் 10 பட்டியலில் பிகில் ஹாஷ்டேக் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியளவில் மற்ற எந்த சினிமா சம்பந்தமான ஹாஷ்டேகுகளும் இந்த பட்டியலில் இடம்பெறாத நிலையில், விஜய்யின் பிகில் ஹாஷ்டேகுக்கு டாப் 10ல் இடம் கிடைத்துள்ளது. இதனை புள்ளிங்கோ ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

அக்கா அர்ச்சனா கல்பாத்தி

பிகில் படத்தின் எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசரான அக்கா அர்ச்சனா கல்பாத்தி பெண்கள் என்டர்டெயின்மென்ட் ட்விட்டர் ஹேண்டில் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். விஜய் ரசிகர்களுக்கு பிகில் குறித்த அப்டேட்களை அனுதினமும் வழங்கி வந்த அர்ச்சனா கல்பாத்திக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

புள்ளிங்கோ ஹாப்பி

விஜய்யின் பிகில் ஹாஷ்டேக் ட்விட்டரின் டாப் 10 ஹாஷ்டேக் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டத்திற்கு தயராகி வருகின்றனர். இன்று மாலை இதற்கான ஸ்பெஷல் ஹாஷ்டேக் ஒன்றை உருவாக்கி டிரெண்டிங்கில் தெறிக்கவிடவும் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X