பிகில், கைதியை தொடர்ந்து இந்தியன் 2வில் இணைந்த பிரபல நடிகர்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் குணசித்திர நடிகர் ஜார்ஜ் மரியன் இணைந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி மற்றும் பிகில் திரைப்படங்களில் ஜார்ஜ் மரியன் நடித்திருந்தது குறிப்

Recommended Video

BIGG BOSS 3 : Indian-2 to Star Tharshan with Kamal Hassan : இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

போபாலில் பிரம்மாண்டமான சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்த நிலையில், படக்குழு தற்போது குவாலியரில் ஷூட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் நாடக நடிகரும், குணசித்திர நடிகருமான ஜார்ஜ் மரியன் இணைந்துள்ளார்.

கைதியில் கலக்கல்

கைதியில் கலக்கல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி திரைப்படத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜார்ஜ் இன்னொரு ஹீரோவாகவே அசத்தியிருந்தார். கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், இந்த போதைப் பொருளை எல்லாம் அழிச்சுட்டுத்தான்பா போகணும், இல்லைன்னா இளைஞர்கள் வாழ்க்கை சீரழிஞ்சுடும் போன்ற வசனங்களை பேசும் ஜார்ஜ் மரியனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிகிலிலும்

பிகிலிலும்

அட்லி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான விஜய்யின் பிகில் திரைப்படத்திலும், ஜார்ஜ் மரியன் நடித்துள்ளார். நயன்தாராவுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பாதிரியார் வேடத்தில் குறைந்த நேரமே வந்தாலும், தியேட்டரில் ரசிகர்களை சிரிக்க வைத்து செல்கிறார் ஜார்ஜ்.

பிரம்மாண்ட சண்டை

பிரம்மாண்ட சண்டை

போபாலில் சமீபத்தில் முகாமிட்ட இந்தியன் 2 படக்குழு அங்கு 40 கோடி ரூபாய் செலவில் 2000 ஜூனியர் நடிகர்கள் நடிக்கும் பிரம்மாண்ட சண்டை காட்சியை படமாக்கியுள்ளனர். இந்த சண்டை காட்சி இந்தியன் 2 படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்தியன் 2வில்

இந்தியன் 2வில்

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், வித்யுத் ஜம்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் ஜார்ஜ் மரியன் தேர்வாகியுள்ளார். அனிருத் இசையமைப்பில் இந்தியன் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X