Bigil: "லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டு தானே".. ஏ.ஆர்.ரஹ்மானை ஊமைக்குத்து குத்திய கஸ்தூரி!
பிகில் பட பாடல் லீக்கான விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் கசிந்தது பற்றி நடிகை கஸ்தூரி கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் நேற்று இணையத்தில் கசிந்தது.
விஜய் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், படக்குழு அதிர்ச்சியில் தான் உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாடல் எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு விசாரித்து வருகிறது.

சிங்க பெண்ணே தான் ஹாட் டாபிக்
இது ஒருபுறம் இருக்க 'சிங்கப் பெண்ணே' பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களின் பேச்சு பொருளாக உள்ளது. எல்லா விஷயங்களுக்கும் கமெண்ட் போடும் நடிகை கஸ்தூரி, பிகில் பாடல் குறித்து தனது பாணியில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ஏற்கனவே கேட்டது தானே...
அதில் அவர், " லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

ஊமைக்குத்து
கஸ்தூரியின் இந்த கமெண்டை 'இது தான் ஊமைக்குத்து' என நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். தமிழ்நாட்டை ஆளப்போவது கஸ்தூரி தான் என ஒரு சிலர் கமெண்ட் பாஸ் செய்கின்றனர்.

ரணகளத்திலும் ஒரு குதூகலம்
ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பது போல, பாட்டு எப்படி கசிந்தது என பிகில் அட்லியும், ரஹ்மானும் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்க, அசால்டாக ஒரு கமெண்ட் போட்டு ஊமை குத்து குத்திவிட்டார் கஸ்தூரி. சிங்கப் பெண்ணே பாடல் கசிந்ததா? அல்லது கசியவிடப்பட்டதா? என்பது வேறு கதை மக்களே.


Click it and Unblock the Notifications











