விஜய்யிடம் இருந்து திருட விரும்பும் விஷயம்.. சுவாரஸ்யம் பகிர்ந்த பிகில் பட நடிகை!

சென்னை : மேயாத மான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

வளர்ந்துவரும் நடிகைகள் பட்டியலில் இருந்தாலும் மகாமுனி, பிகில், நானே வருவேன் என்று இவரது படங்களின் பட்டியல் மிரட்டுகிறது.

குறிப்பாக விஜய்யுடன் பிகில் படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் இந்துஜா.

நடிகை இந்துஜா

நடிகை இந்துஜா

நடிகை இந்துஜா மேயாத மான் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். தமிழ் பெண்ணான இவர், தொடர்ந்து தமிழ் படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரது அடுத்தடுத்த கேரக்டர்கள் மிரட்டி வருகின்றன. வளர்ந்துவரும் நடிகையாக இருந்தாலும் இவரது படங்களின் லைன் அப் மிரட்டுகிறது.

மேயாத மான் படத்தில் அறிமுகம்

மேயாத மான் படத்தில் அறிமுகம்

மேயாத மான் படத்தை தொடர்ந்து மெர்க்குரி, மகாமுனி, பூமராங் போன்ற படங்களில் இவர் சிறப்பான நடிப்பால் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான மகாமுனி படம் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்தது. இந்தப் படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது. படத்தில் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பிகிலில் வேம்புலி கேரக்டர்

பிகிலில் வேம்புலி கேரக்டர்

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் பிகில் படத்தில் இந்துஜா நடித்திருந்த வேம்பு கேரக்டர் இவரை ரசிகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்தியது. விஜய்யின் தலைமையை ஏற்க பிடிக்காமல் இவர் செய்யும் செயல்கள் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து விஜய்யை நல்ல குருவாக ஏற்று கால்பந்தாட்டத்தில் தன்னுடைய குழு வெற்றிப் பெற இவர் செய்யும் விஷயங்கள் அதிகமாக ரசிக்கப்பட்டன.

நானே வருவேன் படத்தில் இந்துஜா

நானே வருவேன் படத்தில் இந்துஜா

தொடர்ந்து சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நானே வருவேன் படத்திலும் நடித்திருந்தார் இந்துஜா. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தனுஷிற்கு அடுத்தப்படியாக இந்துஜாவின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இதனிடையே விஜய் ஆன்டணியுடன் இணைந்து காக்கி படத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்துஜா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் இந்துஜா, அடுத்தடுத்த சிறப்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது நாய்க்குட்டியுடன் மாடர்ன் ட்ரஸ்ஸில் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை இந்துஜா பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

விஜய்யிடம் திருட விரும்பும் விஷயம்

விஜய்யிடம் திருட விரும்பும் விஷயம்

இதனிடையே தனது சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசிய இந்துஜா, தான் அவரிடம் இருந்து அவருடைய அமைதியை திருட விரும்புவதாக தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் பார்த்தவரை, எந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும் சமநிலையுடனும் இருக்கும் விஜய்யின் இந்தக் கேரக்டரை தான் திருட விரும்புவதாகவும் இதன்மூலம் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யை அண்ணாந்து பார்த்தேன்

விஜய்யை அண்ணாந்து பார்த்தேன்

மேலும் பிகில் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் போது அவரை அவருடைய கேரக்டரை தான் எப்போதும் அண்ணாந்து பார்க்கும் சூழ்நிலையே ஏற்பட்டது என்றும் ஒரு பெரிய ஸ்டார் என்றால் அதற்கு அவர்கள் செய்திருக்கும் பல விஷயங்கள், அனைத்து விஷயங்களிலும் சமமாக இருப்பது, சமமான மரியாதை செலுத்துவது போன்ற பல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் இந்துஜா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X