பிகில் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுல மட்டும் எவ்ளோ வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended Video
சென்னை: பிகில் படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் எவ்ளோ வசூல் செய்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் கடந்த 25ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இப்படம் ரிலீஸானது. படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதிக தியேட்டர்கள்
தமிழகம் முழுவதும் அதிகளவு தியேட்டர்களில் பிகில் படம் ரிலீஸானது. பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகளை விஜய் ரசிகர்கள் அதிகம் முன்பதிவு செய்திருந்தனர்.

குறையத் தொடங்கியது
இதனைதொடர்ந்து முதல் நாளில் வசூலை அள்ளியது பிகில் படம். ஆனால் அதன்பிறகு பிகில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற கருத்து எழுந்தது. இதனால் வசூலும் குறையத் தொடங்கியதாக கூறப்பட்டது.

எவ்வளவு வசூல்?
இந்நிலையில் பிகில் படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல் வாரத்தில் மட்டும் பிகில் படம், தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரீன் சீன்
பிகில் படத்தால் விநியோகிஸ்தர்கள் யாருக்கும் நஷ்டமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க
மேலும் பிகில் படம் தமிழகத்தை தாண்டி அமெரிக்காவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர், அரபு நாடுகளில் 16 கோடி, பிரான்சில் 27,000 பார்வையாளர்கள், லண்டனில் 4 கோடி, ஆஸ்திரேலியாவில் 2.30 கோடி, மலேசியாவில் 15 கோடி, கேரளாவில் 15 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, ஆந்திரா-தெலங்கானாவில் 14 கோடி, வட இந்தியாவில் 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Click it and Unblock the Notifications