முதல் வார வசூல் காலி.. பிகில் படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையா! எப்படி சமாளிப்பார்களோ?

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை சரியாக தீபாவளி அன்றுதான் வெளியிட வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

Recommended Video

Bigil Audio launch on september 19

சென்னை: நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை சரியாக தீபாவளி அன்றுதான் வெளியிட வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

கால்பந்து போட்டியை மையமாக வைத்தும், பின்னணியில் டான் கதையை கருவாக கொண்டும் பிகில் கதை தயாராகி உள்ளது. இதனால் பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது.

என்ன பாடல்

என்ன பாடல்

படத்தின் ஒரு பாடல் வெளியாகி உள்ள நிலையில் மீதமுள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது.

தேதி என்ன

தேதி என்ன

பொதுவாக தற்போது தமிழ் படங்கள் எல்லாம் வியாழக்கிழமை வெளியாகிறது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் வசூல்தான் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான வசூலாக பார்க்கப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அவ்வளவு வசூல் செய்ய தயாரிப்பாளர்கள் முயற்சி செய்வார்கள்.

என்ன வழக்கம்

என்ன வழக்கம்

இதனால் கடந்த சில வருடங்களாகவே வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை படம் வெளியாகி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வருடம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதாவது தீபாவளி அடுத்த மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் பிகில் படம் தீபாவளி அன்று வெளியாகாமல் அதற்கு இரண்டு நாட்கள் முன்பே வியாழக்கிழமை அக்டோபர் 24ம் தேதி அல்லது வெள்ளிக்கிழமை அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. லான் வீக் எண்ட் என்பதால் வசூலும் நிறைய இருக்கும் என்று தியேட்டர் ஓனர்கள் கணக்கு போட்டு இருந்தனர்.

வேறு என்ன

வேறு என்ன

ஆனால் தியேட்டர் ஓனர்களின் இந்த கோரிக்கையை பிகில் படத்தின் தயாரிப்பு குழு ஏற்கவில்லையாம். கண்டிப்பாக படத்தை தீபாவளி அன்று ஞாயிற்றுக்கிழமைதான் வெளியிடுவோம். வசூல் போனாலும் பரவாயில்லை, இந்த தீபாவளி தளபதி தீபாவளிதான் என்று கூறி உள்ளனர்.

வசூல் பிரச்சனை

வசூல் பிரச்சனை

ஆனால் தீபாவளிக்கு மறுநாளே திங்கள் கிழமை என்பதால், படத்தின் வசூல் முதல் வாரத்தில் வெகுவாக குறைய இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முதல் வாரத்திற்கு பின்பே வசூல் சூடு பிடிக்கும் என்கிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் கண்டிப்பாக தீபாவளி அன்றுதான் பிகில் வெளியாகும் என்று உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X