முதல் நாளில் டாப்.. 2ம் நாளில் குறைந்த கலெக்ஷன்.. 3ம் நாளில் காற்று வாங்கிய பிகில் தியேட்டர்கள்!

Recommended Video

Bigil Box Office:முதல் நாள் சாதனைபடைத்த பிகில்

சென்னை: பிகில் படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், நயன்தாரா நடிப்பில் பிகில் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு பிறகு இப்படம் ரிலீஸானது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அரங்கம் நிறைந்த காட்சிகள்

அரங்கம் நிறைந்த காட்சிகள்

வெள்ளிக்கிழமை கைதி படம் ரிலீஸான போதும் தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் பிகில் படத்திற்குதான் முன்னுரிமை அளித்தன. இதன்காரணமாக முதல் நாள் பிகில் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது.

ரூ.25 கோடி

ரூ.25 கோடி

இதனால் முதல் நாள் பிகில் படம் வசூலை அள்ளியது. 25 கோடி ரூபாய் வசூலை பார்த்தது பிகில் படம். இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் வசூல் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த கூட்டம்

குறைந்த கூட்டம்

அதாவது இரண்டாவது நாளில் பிகில் படம் 16 கோடி ரூபாய வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளான நேற்று பிகில் படம் ஓடிய பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் பெருமளவு குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதிக்கு வரவேற்பு

கைதிக்கு வரவேற்பு

சென்னையில் மட்டும் நேற்று முதல் 30% கூடுதலான திரையரங்குகளில் கைதி படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிகிலை காட்டிலும் கைதி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X