கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்!

கர்நாடகாவில் பிகில் படத்தை திரையிடும் உரிமையை 8.5 கோடி ரூபாய்க்கு ஸ்ரீ கோகுல் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.

Recommended Video

Bigil Secrets Revealed : விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா?-வீடியோ

பெங்களூரு: தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ கோகுல் ஃபிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

அந்த பெரும் தொகையில் தமிழில் வெளியாகும் பிகில் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள விசில் உரிமையும் அடங்குமாம்.

இதனால், கர்நாடகாவிலும் வரும் அக்டோபர் 25ம் தேதியே பிகில் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

இத்தனை கோடியா?

இத்தனை கோடியா?

பிகில் மற்றும் விசில் பட திரையரங்க வெளியீட்டு உரிமையை 8.5 கோடி ரூபாய்க்கு ஸ்ரீ கோகுல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், கர்நாடகாவில் எந்த எந்த திரையரங்குகளில் நடிகர் விஜய்யின் பிகில் படம் திரையிடப்படும் என்ற திரையரங்க பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரிலீசுக்கு முன்பே

ரிலீசுக்கு முன்பே

விஜய்யின் பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் என இதுவரை படம் வெளியாவதற்கு முன்பே 200 கோடி வரை பிகில் படம் வசூல் செய்து விட்டதாக சினிமா பிஸ்னஸ் குறித்து கண்காணித்து வருபவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி

கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி

இந்த தீபாவளிக்கு கன்னட மொழி சூப்பர்ஸ்டார்கள் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால், ஆந்திரா மற்றும் கேரளாவில் தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துள்ள நடிகர் விஜய், கர்நாடகாவிலும் தனக்கான மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகாவில் வாழும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அக்டோபர் 25ம் தேதியே அங்கும் பிகில் ரிலீஸ் ஆவதால், கர்நாடகாவிலும் பிகில் தீபாவளியை கொண்டாட தயாராகிவிட்டனர்.

பிரச்னை தீர்ந்துவிட்டால்

பிரச்னை தீர்ந்துவிட்டால்

பிகில் படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள கதை திருட்டு வழக்கு பிரச்னை தீர்ந்து குறிப்பிட்ட தேதியில் படம் வெளியானால், படக்குழு எதிர்பார்த்ததை விட அதிக அளவிற்கு படத்தின் வசூல் குவியும் என சினிமா வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X