ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்.. கொண்டாட்டத்தில் ஏஜிஎஸ்.. தாறுமாறு பிஸ்னஸ்!
பிகில் படம் வெளியாவதற்கு முன்பே பல கோடிகளை வியாபாரம் செய்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: பிகில் படம் வெளியாவதற்கு முன்பே பல கோடிகளை வியாபாரம் செய்து இருக்கிறது. இதனால் படத்தின் தயாரிப்பு குழுவான ஏஜிஎஸ் பெரும் சந்தோசத்தில் இருக்கிறது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தில் டிரைலர் கடந்த சனிக்கிழமை வெளியானது.
படத்தில் இரண்டு விஜய் கெட்டப் உள்ளது. மைக்கேல் மற்றும் ராயப்பன் என்ற இரண்டு கெட்டப்பில் விஜய் படத்தில் நடித்து இருக்கிறார்.

எத்தனை விஜய்
இந்த படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை 72 கோடிக்கு சென்றுள்ளது. சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை 50 கோடிக்கு சென்றுள்ளது. வெளிநாட்டு உரிமை 24 கோடிக்கு சென்றுள்ளது.

இந்தி எப்படி
அதேபோல் இந்தி வியாபாரம் 20 கோடிக்கு சென்றுள்ளது. தெலுங்கு உரிமை 8 கோடிக்கு சென்று இருக்கிறது. இன் பிலிம் உரிமை 2 கோடிக்கு சென்றுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா உரிமை 14 கோடிக்கு சென்றுள்ளது.

என்ன பாடல்கள்
படத்தின் பாடல்கள் 2 கோடிக்கு சென்றுள்ளது. இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே 200 கோடியை வியாபாரம் செய்துள்ளது. இதில் தியேட்டர் ஷேர் போக 150 கோடி ரூபாய் வரை வரும். ஆகவே படம் வெளியான பின் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் என்ன
இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடியாகும். அதே சமயம் படம் கண்டிப்பாக 150 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் வரை படம் லாபம் பார்க்கும் என்கிறார்கள். இதனால் படத்தின் தயாரிப்பு குழுவான ஏஜிஎஸ் பெரும் சந்தோசத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











