உலகம் முழுவதும் 3 நாட்களில் 100 கோடிக்கு மேல் அள்ளிய பிகில்! ஹேப்பி மோடில் தயாரிப்பு தரப்பு!
Recommended Video
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் கடந்த மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படம் இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதேபோல் கார்த்தியின் கைதி திரைப்படமும் வெளியாகி இருந்தது.
கைதியை விட பிகில் படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் என்பதால் முதல் நாள் வசூலும் பிகிலுக்கு அதிகமாகவே இருந்தது. தமிழகம் முழுவம் பிகில் படம் முதல் நாளில் 21 கோடி ரூபாய் என்றும் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் இரு மாறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன.

உலகளவில் ரிலீஸ்
தெறி, மெர்சல் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணி பிகில் படம் உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் உலகளவில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ரிலீஸானது.

ரூ.180 கோடி செலவு
திரைக்கு வந்த மூன்று நாட்களில் பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம் 180 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
ரூ.100 கோடிக்கு மேல்
படத்தின் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதாவது பிகில் படம் உலகம் முழுக்க 100 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
5.26 கோடி
சென்னை சிட்டியில் மட்டும் பிகில் படம் 5.26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 1.79 மற்றும் 1.73 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்
பிகில் படம் ரிலீஸானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படம் நீண்ட நேரம் ஓடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் அவரின் நடிப்பையும் படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











