படம் வருமா என்பதே சந்தேகம்தான்.. பிகிலுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. கடைசி நேரத்தில் என்ன ஆகுமோ!

பிகில் படம் வெளியாவதில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படலாம், சிக்கல் உண்டாகலாம் என்று சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

Recommended Video

பிகிலுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. கடைசி நேரத்தில் என்ன ஆகுமோ!- வீடியோ

சென்னை: பிகில் படம் வெளியாவதில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படலாம், சிக்கல் உண்டாகலாம் என்று சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் டிரைலருக்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தில் டிரைலர் இந்த வாரம் சனிக்கிழமை வெளியாகிறது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

இந்த நிலையில் பிகில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் வருகிறது. சில முன்னணி தியேட்டர்கள் தீபாவளிக்கு பிகில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் மற்ற சிறிய தியேட்டர் உரிமையாளர்கள், படம் வெளியாவது சந்தேகம்தான், அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி இருக்கிறார்களாம்.

எப்படி

எப்படி

ஏற்கனவே விஜய் நடித்த சுறா, வேட்டைக்காரன், தெறி, சர்க்கார் ஆகிய படங்கள் வெளியாகாமல் பெரிய அளவில் தாமதம் ஆனது. தெறி, சர்க்கார் போது இருந்த அதிமுக அரசு, படத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

மீண்டும் எப்படி

மீண்டும் எப்படி

இந்த முறை பிகில் படத்திற்கு எதிராகவும் அரசு காய் நகர்த்தும். கடைசி நேரத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படலாம். ஆகவே படம் வெளியாவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். கடைசி நேரத்தில் வழக்கு, விசாரணை என்று சில அதிரடி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

இப்படி

இப்படி

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது விஜய் தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து பேசினார். சில முக்கியமான சிக்கல்கள், பேனர் பிரச்சனைகள் குறித்து பேசினார். இவர் தனது பேச்சில் தமிழக அரசை ஒருவகையில் மறைமுகமாக விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதனால் அதிமுக பிகில் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால்தான் தியேட்டர் நிர்வாகிகளும் பிகில் படத்தை விட கைதி படத்தை வாங்குவதே நல்லது. படமும் பிரச்சனை இல்லாமல் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X