பிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு! #BigilDiwali
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நடிகை விஜய் டபுள் ஆக்ஷனிலும், நயன்தார ஃபீமேல் லீடிங் ரோலிலும் நடித்துள்ளார்.

ரிலீஸ் சந்தேகம்
இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை குழு சம்பந்தமான பணிகளால் குறித்த தேதியில் ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

சென்சார் பணிகள்
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், பிகில் சென்சார் பணிகள் நிறைவடைந்துவிட்டது.
ரிலீஸ் தேதி
படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பிகில் ட்ரெயிலர் 2 மில்லியன் லைக்ஸ்களை தாண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

யு/ஏ சான்றிதழ்
இந்நிலையில் பிகில் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் 3 மணி நேரம் அதாவது 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்சார் பிரச்சனைகள் தீர்ந்துள்ள நிலையில்
பிகில் படம் அறிவித்தப்படி தீபாவளிக்கு ரிலீஸாகும் என நம்பப்படுகிறது. தீபாவளிக்கு பிகில் படம் ரிலீஸாகும் என்ற தகவல் கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











