சிறுவனின் உயிரை காப்பாற்றிய பிகில் திரைப்படம்.. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்!
சென்னை: இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது விஜய்யின் பிகில் திரைப்படம்.
தனது மாமா அரவிந்த் உடன் சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன் பைக்கில் பயணித்த போது தூங்கிக் கொண்டே சென்றதால் கீழே சரிந்து விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

விபத்தில் சிக்கிய சிறுவன்
சென்னை, மயிலாப்பூரில் உள்ள கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் தூங்கிக் கொண்டே பயணம் செய்துள்ள போது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்து தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க ஊசி போட்டு வலியில்லாமல் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்த போது மருத்துவர்களை ஊசி போடவே விடாமல் சிறுவன் அடம்பிடித்துள்ளான்.

விஜய் ரசிகர்
அங்கே இருந்த தன்னார்வலர் ஒருவர் உனக்கு என்ன பிடிக்கும் என சிறுவனிடம் பேச்சுக் கொடுக்க தனக்கு நடிகர் விஜய்யை தான் பிடிக்கும் என்றும், விஜய் நடித்த படங்கள், பாடல்கள் எல்லாமே மனப்பாடமாய் தெரியும் எனக் கூறியுள்ளான்.

பிகில் படம்
சிறுவனுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க நடிகர் விஜய்யை விட்டால் வேறு வழியில்லை என அறிந்து கொண்ட மருத்துவர்கள், சிறுவனுக்கு மொபைல் போனில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு காண்பித்துள்ளனர். மெய் மறந்து பிகில் படத்தை சிறுவன் பார்த்த கேப்பில் அவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

தெறிக்குது டிரெண்டிங்
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ள செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் அன்சீன் போட்டோக்களை ஷேர் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











