Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்: என்ன பயன் ஏற்படும்?
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறுவனின் உயிரை காப்பாற்றிய பிகில் திரைப்படம்.. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்!
சென்னை: இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது விஜய்யின் பிகில் திரைப்படம்.
தனது மாமா அரவிந்த் உடன் சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன் பைக்கில் பயணித்த போது தூங்கிக் கொண்டே சென்றதால் கீழே சரிந்து விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
விஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை ?

விபத்தில் சிக்கிய சிறுவன்
சென்னை, மயிலாப்பூரில் உள்ள கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் தூங்கிக் கொண்டே பயணம் செய்துள்ள போது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்து தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க ஊசி போட்டு வலியில்லாமல் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்த போது மருத்துவர்களை ஊசி போடவே விடாமல் சிறுவன் அடம்பிடித்துள்ளான்.

விஜய் ரசிகர்
அங்கே இருந்த தன்னார்வலர் ஒருவர் உனக்கு என்ன பிடிக்கும் என சிறுவனிடம் பேச்சுக் கொடுக்க தனக்கு நடிகர் விஜய்யை தான் பிடிக்கும் என்றும், விஜய் நடித்த படங்கள், பாடல்கள் எல்லாமே மனப்பாடமாய் தெரியும் எனக் கூறியுள்ளான்.

பிகில் படம்
சிறுவனுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க நடிகர் விஜய்யை விட்டால் வேறு வழியில்லை என அறிந்து கொண்ட மருத்துவர்கள், சிறுவனுக்கு மொபைல் போனில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு காண்பித்துள்ளனர். மெய் மறந்து பிகில் படத்தை சிறுவன் பார்த்த கேப்பில் அவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

தெறிக்குது டிரெண்டிங்
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ள செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் அன்சீன் போட்டோக்களை ஷேர் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.