2வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிகில் படம்... கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் கடந்த 2019ல் வெளியான படம் பிகில்.

பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தளபதி விஜய்

தளபதி விஜய்

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் சிறப்பா வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

இந்தப் படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையொட்டி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் -நயன்தாரா நடிப்பில் கடந்த 2019ல் வெளியான பிகில் படம் தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.

வரவேற்பை பெற்ற பிகில் படம்

வரவேற்பை பெற்ற பிகில் படம்

தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லி -விஜய் கூட்டணியில் வெளியானது பிகில். இந்தப் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

கால்பந்து பயிற்சியாளர்

கால்பந்து பயிற்சியாளர்

கால்பந்து பயிற்சியாளராக இந்தப் படத்தில் விஜய் நடித்திருந்தார். அதில் காணப்படும் அரசியலையும் படம் சொன்னது. கீழ்தட்டு மக்களுக்கும் விளையாட்டு சாத்தியப்பட வேண்டும் என்பதை மையமாக பிகில் படம் பேசியது. படத்தில் கமர்சியல் அம்சங்கள் அதிகமாக காணப்பட்டன.

2019ல் வெளியீடு

2019ல் வெளியீடு

படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். மேலும் கதிர், யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருநதனர். கடந்த 2019ல் தீபாவளியையொட்டி வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

வெறித்தனம் பாடல்

வெறித்தனம் பாடல்

படத்தில் விஜய் பாடியிருந்த வெறித்தனம் பாடல் குறைந்த நேரத்தில் யூடியூபில் ட்ரெண்டிங் ஆனது. 19 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் 7.35 லட்சம் லைக்குகளையும் பெற்றது. இதை விஜய் ரசிகர்கள் அப்போது கொண்டாடினர். இந்நிலையில் தற்போது இந்தப் படம் வெளியாகி 2 ஆண்டுகளை படம் கடந்துள்ளது.

2 ஆண்டு கொண்டாட்டம்

2 ஆண்டு கொண்டாட்டம்

இதை தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். பலரும் பிகில் படத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் முக்கியமான படமாக பிகில் உள்ளது. இந்தப் படம் 2 ஆண்டுகளை கடந்துள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X