கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தென்றல் அம்ரிதா... அனைவரும் போட கோரிக்கை

சென்னை : பிகில் படத்தில் தென்றலாக சிறப்பாக நடித்து கலக்கியவர் நடிகை அம்ரிதா.

Recommended Video

COVID Vaccine in PERIODS and PREGNANCY | Dr.Karthika தெளிவான விளக்கம்

சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.

நல்ல பெயரை கொடுத்த பிகில்

நல்ல பெயரை கொடுத்த பிகில்

நடிகை அம்ரிதா ஐயர் கர்நாடகாவில் பிறந்தவர். திரையுலகில் ஆர்வம் கொண்ட இவர் மாடலிங்கில் நுழைந்து அதன்மூலம் சினிமா துறையில் நுழைந்து பெயர் பெற்றவர். தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு பிகில் படம் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

நல்ல அறிமுகம்

நல்ல அறிமுகம்

படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தன்னுடைய கேரக்டரை பேச வைத்துள்ளார். இந்த படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் நல்ல அறிமுகமும் இவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக படைவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படமே இவருடைய கேரியரில் சிறப்பை சேர்த்துள்ளது.

ஜிவியுடன் ஜோடி

ஜிவியுடன் ஜோடி

சமீபத்தில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமாருடன் இவர் இணைந்து நடித்த வணக்கம்டா மாப்ளே படம் வெளியாகி இவருக்கு சிறப்பான பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படத்தின் நாயகனாக நடித்திருந்த ஜிவி பிரகாஷ்குமார் படத்தின் இசையையும் அமைத்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இந்நிலையில் தற்போது அவர் கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், மற்றவர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டிருப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையென்றால் உடனடியாக போடவும் அறிவுறுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X