பிகில் ட்ரெய்லர் அக்டோபர் 12 ல் ரிலீஸ் - தீபாவளிக்கு படம் ரிலீஸ்
சென்னை: நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. மேலும் இப்படம் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது. 10 ஆண்டு இடைவெளிக்கு பின்பு நடிகை நயன்தாரா விஜய் உடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் சார்பில் பெரும் பொருட்செலவில் பிகில் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

பிகில் படத்தின் ஒளிப்பதிவுப் பணியை ஜி.கே.விஷ்ணு மேற்கொள்ள, படத்தொகுப்பு வேலையை ரூபண் எல்.ஆண்டனியும் பார்த்துக்கொள்ள, சண்டைப் பயிற்சியை அனல் அரசு அனல் பறக்க வைக்க, ஆர்ட் டைரக்ஷன் பணியை டி.முத்துராஜ மேற்கொள்ள, பாடல் வரிகளை விவேக் உருவாக்கியுள்ளாரர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவாவின் இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில் விஜய் உடன் நடிகை நயன்தாரா ஜோடியான நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்பு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது இருவரும் இணைந்து பிகில் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனால், இப்படம் வெளியாவதை விஜய் ரசிகர்களும் நயன்தாரா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

பிகில் படத்தில் விஜய் இரு வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மகன் கதாபாத்திரத்தில் பெண்கள் கால்பந்தாட்ட கோச்சாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் மார்கெட்டில் கசாப்பு கடை நடத்துபவராகவும் நடித்துள்ளார். இதனால் படத்தில் பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், தேவதர்ஷினி, யோகிபாபு, மனோபாலா, L.M.விஜயன், இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில், தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வருகின்ற அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











