பிகில் அப்டேட்... அரசியல் வசனம் எதுவும் இல்லையாம் - அடித்துச்சொல்லும் அட்லி

Recommended Video

Bigil Song : Viral Song Leaked Singapenne | இணையத்தில் வைரலான சிங்கப்பெண்ணே பாடல்-Filmibeat Tamil

சென்னை: தளபதி விஜய்-நயன்தார நடிக்கிற பிகில் படத்தோட இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில இருக்கு. ஆகஸ்ட் பத்துடன் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று படக்குழுவினர் சொல்லியிருக்காங்க. இந்தப்படத்துல முக்கியமா அரசியல் சம்பந்தமான எந்த பஞ்ச் வசனங்களும் இருக்காதுன்னு படக்குழு சார்பா தெரிவிச்சிருக்காங்க.

தளபதி விஜய், இயக்குநர் அட்லி கூட்டணியில ஏற்கனவே தெறி, மெர்சல்ன்னு ரெண்டு படம் வெளியாகி ஹிட்டானது எல்லாருக்கும் தெரியும். அந்த ரெண்டு படத்துலேயும் அதிகமா பஞ்ச் டயலாக் இருந்ததால தான் வெற்றி பெற்றிச்சின்னு விஜயோடு ரசிகர்கள் நம்புனாங்க.

Bigil Movie update: Thalapathi Vijay Movie no political punch says atlee

ஆனா, அடுத்து வந்த சர்கார் படத்துல ரொம்ப அதிகமா அரசியல் பஞ்ச் டயாலாக் இருந்ததால எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறல. இதனால தளபதி விஜய் அடுத்ததா நடிக்கிற படத்துல நிச்சயமா அரசியல் பஞ்ச் டயலாக் இருக்காதுன்னு அவரோட ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க. அவரோட ரசிகர்களின் ஆசைய பூர்த்தி செய்யுற மாதிரியே இப்போ நடிக்கிற பிகில் படத்துல அரசியல் சம்பந்தமா டயலாக் எதுவுமே இருக்காதுன்னு படக்குழு தெரிவிச்சிருக்கு.

தளபதி விஜய்-அட்லி இணையும் மூனாவது படமான பிகில் படத்துல லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர் ஆனந்த், இவங்களோட வில்லனா இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கலக்கப்போறார். பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களோட கால்பந்தாட்டத்தெ மையமா வச்சிதான் ரெடியாகிட்டிருக்கு.

பிகில் படத்துல தளபதி விஜய் ரெண்டு வெரைட்டியான ரோல்ல நடிச்சிருக்காரு. அப்பா கேரக்டர்ல மதுரை மார்கெட்டில் கசாப்பு கடை நடத்துறார். மகன் கேரக்டர்ல பெண்களோட கால்பந்தாட்ட கோச்சா வர்றாரு.

இந்தப்படத்துல இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்சு அவரே பாடுன 'சிங்கப்பெண்ணே’ங்குற பாட்டு சமீபத்துல ரிலீஸ் ஆகி செம ஹிட்டாயிடுச்சி. அந்தப் பாட்டெ யூடியூப்ல இதுவரைக்கும் கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் கேட்டு ரசிச்சிருக்காங்க. முக்கியமா இந்தப் படத்துல தளபதி விஜய் முதன் முதலா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல பாடியிருக்கார்.

இந்த நிலமையில பிகில் படத்தோட படப்பிடிப்பு இப்போ இறுதிக்கட்டத்தை நெருங்கிடிச்சின்னு தகவல் வெளிவந்திருக்கு. ஆகஸ்ட் 10ஆம் தேதி படப்பிடிப்பு முடியப்போகுது. படத்தோட போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிந்து தளபதி ரசிகர்கள் எதிர்பாக்குறது மாதிரி வர்ற தீபாவளிக்கு கண்டிப்பா இந்தப் படம் ரிலீசாகும்னு படக்குழு சார்பா சொல்லியிருக்காங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X