பிகில் அப்டேட்…. வெறித்தனம் ரிலீஸ் ஆன நேரத்தில் ஸ்டாலினுடன் கைகுலுக்கிய விஜய்
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அதே சமயத்தில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் கை குலுக்கி பேசும் ஃபோட்டோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அட்லியுடன் விஜய் இணைந்துள்ள மூன்றாவது படம் பிகில். இரு வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடிய சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய வெறித்தனம் என்ற பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தளபதி விஜய் பாடியிருந்தார். இந்தப் பாடலும் நேற்று இணையதளத்தில் வெளியானது.
இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் சாதனையை இணையதளத்தில் செய்தது. செய்து கொண்டு வருகிறது. ஒரே நாளில் 6 மில்லியன் பேர் இப்பாடலை பார்த்து ரசித்துள்ளனர். பொதுவாகவே விஜய் பாடினால் அந்த பாடல் மிக பெரிய வெற்றி பெரும்.
அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிரெண்டிங்கிலும் உச்சத்தில் தான் இருக்கிறது. பிகில் லுக்கில் விஜய்யை பார்க்க பலருக்கும் ஆர்வம். அனால் அவர் பொது விழாக்களில் அதிகம் கலந்து கொள்வதில்லை. மிக முக்கியம் மற்றும் அவசியம் என்று கருதினால் மட்டுமே செல்வார்.
அந்த வகையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சகோதரி மு.க.செல்வின் பேத்தி ஓவியாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் சென்றிருக்கிறார். கூட்டம் கலை கட்டியது. அங்கு திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் வந்துள்ளனர்.

எல்லோரிடமும் கனிவாக கைகுலுக்கி பேசிய தளபதி விஜய், அங்கு வந்த ஸ்டாலினிடமும் நட்பாக கைகுலுக்கி நலம் விசாரித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பிகில் படத்தில் இருப்பது போல அவரின் லுக் இருந்ததை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் கோட் சூட் அணிந்து வரும் அந்த கல்யாண மண்டபத்தில் பெரும்பாலானவர்கள் ஃபோட்டோக்களை எடுத்து தள்ளிவிட்டனர். குறிப்பாக இளைய தளபதி விஜய்யும் திமுக தலைவர் ஸ்டாலினும் பேசுவது போல் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications