பிகில் நல்லாதான் இருக்கு.. ஆனா இதை மறந்துட்டீங்களே பாஸ்.. அட்லீயிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
இதை மறந்துட்டீங்களே பாஸ்.. அட்லீயிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் எல்லா விஷயமும் நன்றாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிகில் படம் சிறப்பு காட்சி அனுமதியோடு வெளியாகி உள்ளது. படத்திற்கு அதிகாலை 1 மணிக்கே ரசிகர் ஷோ போட்டு கொண்டாடி இருக்கிறார்கள்.
படம் காலையில் இருந்து நல்ல ரிவ்யூக்களை பெற்று வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ரிவ்யூ எழுதி வருகிறார்கள்.

எப்படி
இந்த படத்தில் எல்லாம் நன்றாக இருந்தாலும் விஎப்எக்ஸ் மட்டும் மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த படத்தில் கால்பந்து போட்டி தொடர்பான காட்சிகள் பல விஎப்எக்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. பெரிய செட் போட்டு அதில் கால் பந்து விளையாடி இருக்கிறார்கள்.

ஏன் இப்படி
பின் அந்த செட்டில் கூட்டம் இருப்பது போலவும், ஸ்டண்ட் செய்து கோல் போடுவது போலவும் விஎப்எக்ஸ் செய்துள்ளனர். இந்த காட்சிகள் அவ்வளவு சரியாக வரவில்லை. சில இடங்களில் விஎப்எக்ஸ் மோசமாக சொதப்பி இருக்கிறது.

காட்சிகள் மோசம்
சில இடங்களில் விஎப்எக்ஸ் ஓகே ரகத்தில் இருக்கிறது. ஆனால் விஎப்எக்ஸ் எங்குமே பெஸ்ட் ரகம் என்று சொல்ல முடியாது. விஎப்எக்ஸ் செய்ய இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷங்கர் வாரிசு
இயக்குனர் அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து பாடம் பயின்றவர். தமிழில் விஎப்எக்ஸ் புலி என்றால், அது இயக்குனர் ஷங்கர்தான். அவருடைய சிஷ்யன் படத்தில் விஎப்எக்ஸ் இவ்வளவு மோசமாக இருப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











