'பிகில்' அடிக்கக்கூட ஆளில்லை.. பிரபல தியேட்டரில் காட்சி ரத்து.. விஜய் ரசிகர்கள் ஷாக்.!
போதுமான கூட்டம் வராததால் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் பிகில் படத்தின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது.
சென்னை: போதுமான கூட்டம் வராததால் பிகில் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெளியான நான்கு நாட்களில் பிகில் திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்றைய தினம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஆர்பரித்தனர். #BigilHits200CRs என ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கினர்.
மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து மூன்று தீபாவளிக்கும் வெளியான விஜய் படங்கள் 200 கோடி கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் இன்று பிகில் படத்தின் மதிய காட்சிக்கு போதுமான டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லையாம். இதனால் அந்த காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்துவிட்டது.
இதையடுத்து ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தவர்களுக்கு, தேவி மெயின் ஸ்கிரீனில் படம் பார்க்க டிக்கெட் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. பிகில் திரைப்படம் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில், இந்த செய்தி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications