தமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி!

பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிகில் படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு தற்போது ட்விட்டரில் லைவ்வாக பதிலளித்து வருகிறார்.

Recommended Video

Bigil Producer Archana Kalpathi answered to Vijay Fans in Twitter live

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பிகில் படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் தற்போது லைவ்வாக பதிலளித்து வருகிறார் அர்ச்சனா கல்பாத்தி.

பான் இந்தியா இல்லை

அர்ச்சனாவிடம் இந்த படம் ஏன் பான் இந்தியா படமாக உருவாகவில்லை என்றும் இந்தியில் ஏன் டப் செய்யப்படவில்லை என்றும் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விக்கு பதிலளித்த அர்ச்சனா, தீபாவளி ரிலீசுக்காக உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே வெளியாகிறது. வட இந்தியாவில் 200 தியேட்டர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக பிகிலை உருவாக்க திட்டமிடவில்லை என்றார்.

புக்கிங் எப்போ?

புக்கிங் எப்போ?

பிகில் படத்தின் டிக்கெட் புக்கிங் அனைத்து தியேட்டர்களிலும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன என்றும் அனைத்து தியேட்டர்களிலும் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் டிக்கெட் விற்பனை தொடங்கிவிடும் என்று கூறினார்.

பைரசியை தடுக்க வழி

பைரசியை தடுக்க வழி

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசியில் இருந்து பிகில் படத்தை காப்பாற்ற ஏதாவது ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என்ற ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விடையளித்த அர்ச்சனா கல்பாத்தி, இணையத்தில் திருட்டுத்தனமாக பிகில் படத்தை வெளியிட கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளோம். மேலும், பைரசி தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி உள்ளோம் எல்லாவற்றுக்கும் மேலாக, ரசிகர்களாகிய நீங்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பாருங்கள் பைரசியில் பார்க்காதீர்கள் என சிரித்துக் கொண்டே கூறினார்.

படத்தின் பட்ஜெட்

படத்தின் பட்ஜெட்

பிகில் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஜிஎஸ்டி இல்லாமல் 180 கோடி என பதிலளித்தார். மேலும், டிரைலரில் கிராபிக்ஸ் சரியில்லையே என்ற கேள்விக்கு, படத்தை பாருங்க மிரண்டு போவீங்க, கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக வந்துள்ளது என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X