கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்.. ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. தீபாவளிக்கு முன்பே பிகில் ஊதலாம் விஜய் ரசிகாஸ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாகிறது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அறிவித்துள்ளார்.
விஜய் - அட்லீ வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் பிகில். விஜய் இதில் மூன்று கெட்டப்புகளில் வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

பிகில் படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இந்த டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதிகம் பேர் லைக் செய்த டிரெய்லராக பிகில் உள்ளது. 4 தினங்களில் மூன்று கோடி பார்வைகளை இந்த டிரெய்லர் கடந்துள்ளது.
பிகில் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/எ சான்று வழங்கியுள்ளனர். படத்தில் இடம்பெற்ற டெல்லி, கோர்ட் உள்ளிட்ட வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. வன்முறை நிறைந்த காட்சி ஒன்று படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி டிவிட்டரில் அறிவித்துள்ளார். படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகைக்கு 2 தினங்கள் முன்பே ரிலீசாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் முன்கூட்டியே தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
ஆனால் இசை வெளியீட்டு விழாவின் விஜய் பேசியதை அடுத்து, கதை திருட்டு சர்ச்சை, நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது பிகில். இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











