நள்ளிரவு 12 மணிக்கு வெளியான பிகில் 2வது லுக்.. விடிய விடிய தூள் கிளப்பிய ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் பிகில் 2வது லுக் வெளியிடப்பட்டது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் பிகில். இந்தப் படம் நடிகர் விஜயின் 63வது படம் ஆகும்.
படத்திற்கு பெயர் வைக்கப்படாததால் நேற்று மாலை 6 மணி வரை விஜயின் ரசிகர்கள் தளபதி 63 என குறிப்பிட்டு வந்தனர். சமூக வலைதளங்களையும் இதே பெயராலேயே கடந்த 3 நாட்களாக கலக்கி வந்தனர்.

படத்தின் பெயர் பிகில்
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் மூலம் படத்தின் பெயல் பிகில் என தெரியவந்தது.

தந்தை மகன்?
இதில் 2 கெட்டப்புகளில் நடிகர் விஜய் நடிப்பது உறுதியானது. இது தந்தை மகன் கெட்டப்பாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் வரவேற்பு
கறிக்கடையில் அமர்ந்திருக்கும் அப்பாவாகவும், கையில் பந்துடன் இளம் வயதாகவும் என இரண்டு கெட்டப்புகளில் நடிகர் விஜய் இருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நள்ளிரவில் 2வது லுக்
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிகில் 2வது லுக் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சான கல்பாத்தி நள்ளிரவு 12 மணிக்கு 2வது லுக் போஸ்டரை வெளியிட்டார்.

கோட் சூட்டில் அசத்தல்
இதில் மைக்கேல் என பெயரிடப்பட்ட 5 எண் சிவப்பு நிற ஜெர்ஸியுடன் ஒரு விஜயும், கையில் அரிவாளுடன் காவி வேட்டி, நெற்றியில் குங்குமம் என ஒரு விஜயும், கையில் பந்துடன் ஒரு விஜய், மற்றும் கோட்சூட்டில் ஒரு விஜய் என 4 பேர் இருப்பது போன்று 2வது லுக் அமைந்துள்ளது.

பரிசுக்கொடுத்த படக்குழு
2வது லுக் வெளியான சில நிமிடங்களிலேயே 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியது. 21 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் 2வது லுக்கை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











