Bigil Second Look Poster: வெளியானது பிகில் 2வது போஸ்டர்.. பர்ஸ்ட்லுக்கவிட செமையா இருக்கே!
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் பிறந்தநாளையொட்டி, நள்ளிரவு 12 மணிக்கு பிகில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய்யின் 45வது பிறந்தநாள் கொண்டாடத்தின் ஒருபகுதியாக, பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது. அதில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் போஸ் கொடுத்திருந்தார்.

பிகில் பர்ஸ்ட் லுக்
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புட் பால் கோச்சான இளைய விஜய், கையில் பாலுடன் அப்பாவுக்கு பின்னால் நிற்கிறார். அப்பா விஜய்யோ காலா ரஜினி ஸ்டைலில் காவி வேட்டி, கருப்பு சட்டை என செம கெத்தாக அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கு முன்னால் ஒரு கத்தி, மரக்கட்டையில் செருகி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் மீன் மார்க்கெட்டில் இருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டது.

செகண்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரைவிட செகண்ட் லுக் போஸ்டர் செம மாஸாக உள்ளது. பிகில் படக்குழு விஜய்க்கு சூப்பரான பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.

சூப்பரான பிறந்தநாள் பரிசு
இரண்டாவது போஸ்டரில் விஜய் செம ஸ்டைலாக இருக்கிறார். நான்கு கெட்டப்புகளில் விஜய் இதில் இருக்கிறார். விஜய்யின் பெயர் மைக்கேல் என டிசர்ட்டில் உள்ளது. கோட் சூட்டிலும் விஜய் இருக்கிறார்.

விஜய் பிறந்தநாள்
விஜய் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம் போன்றவைகளுக்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. நடிகர்கள், நடிகைகள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications