உலகம் முழுக்க 'பெத்த' கலெக்ஷன்.. பிகில் செய்த 'பிக்' ரெக்கார்டு.. ஹேப்பி மோடில் புள்ளீங்கோ!
Recommended Video
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் உலகம் முழுக்க பெத்த வசூலை குவித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவான பிகில் படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி ரிலீஸாக இந்த படம் திரைக்கு வந்தது.
கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

கலவை விமர்சனம்
தமிழகத்தில் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. பிகில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

பல மாநிலங்கள்
ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

புதிய சாதனை
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் 10 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகம்
ஏற்கனவே மெர்சல் மற்றும் சர்க்கார் படங்களுக்குப் பிறகு ரூ.200 கோடியை தாண்டி வசூலித்த படம் பிகில் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 250 கோடி ரூபாயை கடந்திருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிகில்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
ஏற்கனவே பிகில் படத்தால் நஷ்டம் என்ற தகவல் பரவலாக பரவி வந்தது. இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.‘


Click it and Unblock the Notifications











