பிகில் சிங்கபெண்களின் டிக் டாக் அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த பெண்கள், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த டிக் டாக் கிளிக்குகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்குநர் அட்லீ வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணியின் வசனங்களை பேசி நடித்துள்ளார். அவை தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான பிகில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வசூல் சாதனைகளை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Bigil Shooting spot Tik Tok clicks viral on social media

படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்துப்போய் விட்டது. மேலும் பெண்களுக்கும் இந்த படம் மிகவும் பிடித்திருந்ததாக பெண்கள் கூறினார்கள். பிகில் படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்.

அதில் ராயப்பன் கதாபாத்திரம் விஜய் ரசிகர்களை கவர்ந்ததாகவும் மைக்கேல் கதாபத்திரம் அனைவரையும் பல நேரத்தில் புல்லரிக்க வைத்தது என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். பிகில் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஜெராஃப், கதிர், இந்துஜா, வர்ஷா போலம்மா, அம்ரூதா, சாய்தீனா, ஆனந்த்ராஜ் போன்ற பலரும் படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தில், சிங்கப்பெண்ணே பாடலின் போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், அட்லீ ஆகிய இருவரும், திரையரங்குக்கு வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர். படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சுமார் 180 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாய் உருவாக்கி உள்ளது.

தற்போது படப்படிப்பின் போது அட்லீ சிங்கப்பெண்களுடன் எடுத்த டிக்டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு டிக்டாக்கில் அட்லி 'பிரண்டஸ்' பட காமெடியை எல்லா பெண்களுடன் சேர்ந்து செய்திருப்பார். அதில் நேசமணி அதாவது வடிவேலு வசனத்தை பேசி இருந்தார் அட்லி. மேலும், அதே ஃபிரண்டஸ் படத்தில், மற்றொரு வடிவேலு காமெடியையும் அந்த படத்தின் சிங்க பெண்களுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதுவும் சமூக வலைதளங்களில் பரவி, வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X