twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகில் கதைத் திருட்டு வழக்கு வாபஸ்: இனி நிம்மதியாக ஊதலாம்

    |

    Recommended Video

    Bigil Movie Update : Bigil Story theft case withdrawn

    சென்னை: விஜய் நடிக்கும் பிகில் படத்தின் மூலக்கதை தன்னுடையது என்று கூறி வழக்கு தொடுத்த கே.பி.செல்வா, வழக்கை வாபஸ் பெற்றதை அடுத்து பிகில் படம் வெளியாவதில் இருந்த தடை நீங்கியது.

    இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

    வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க அனுமதி வழங்க மறுத்து விட்டது. வேறு வழியில்லாமல், இறுதியில் வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

    புத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் புத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்

    கதைத்திருட்டும் விஜய் படமும்

    கதைத்திருட்டும் விஜய் படமும்

    பிரிக்க முடியாதது என்னவோ என்று திருவிளையாடல் படத்தில் தருமி கேட்ட கேள்விக்கு, இனிமேல் கதைத் திருட்டு வழக்கும் விஜய் படமும் என்று தான் சொல்லவேண்டும் போல் இருக்கிறது. கடந்த எட்டு வருட காலத்தில் இவருடைய படங்கள் தான் அதிக அளவில் கதைத் திருட்டு வழக்கில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது.

    முதலில் சுட்ட துப்பாக்கி

    முதலில் சுட்ட துப்பாக்கி

    துப்பாக்கி படத்தில் ஆரம்பித்த கதைத் திருட்டு பிரச்சனை தொடர்ந்து கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் வரை வந்து இறுதியில் பிகில் படத்தில் வந்து நிற்கிறது. அதிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களுமே கதைத் திருட்டு வழக்கில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது.

    வெற்றிக்கூட்டணி

    வெற்றிக்கூட்டணி

    தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக பிகில் களம் வெளிவரப்போகிறது. இப்படம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

    பதிப்புரிமை பெற்றது

    பதிப்புரிமை பெற்றது

    கே.பி.செல்வா என்பவர் பிகில் என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் தளபதி 63 படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.

    ஒரு காரணமும் கிடையாது

    ஒரு காரணமும் கிடையாது

    இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள்.

    வாபஸ் வாங்குகிறேன்

    வாபஸ் வாங்குகிறேன்

    இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க அனுமதி வழங்க மறுத்து விட்டது. வேறு வழியில்லாமல், இறுதியில் வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

    இப்ப போறேன் திரும்பி வருவேன்

    இப்ப போறேன் திரும்பி வருவேன்

    இது குறித்து கருத்து தெரிவித்த கே.பி.செல்வா, கதை திருட்டு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யவேண்டுமே தவிர, சாதாரண சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யக்கூடாது. இதைத்தான் இந்த நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ஆகவே, நான் மீண்டும் இதே வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். இது தொடர்பாக சம்பந்தப் பட்ட ஏ.ஜி.எஸ்.நிறுவனத்திடமும் முறையாக தெரிவிப்பேன் என்று கூறினார். இதனால், பிகில் ஊதுவதற்கு ஏற்பட்ட தற்காலிக முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

    எச்சரிக்கை மணி யாருக்கு

    எச்சரிக்கை மணி யாருக்கு

    கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.

    English summary
    The Story writer K.P.Selva now withdraw the Bigil movie story theft case from city civil court. Thus, the ban on the release of the film has been lifted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X