மெர்சல் மாதிரி இதுவும் பழி வாங்கும் படலம் தான்.. ஆனால்.. வைரலாகும் விஜய்யின் பிகில் படக்கதை!
விஜய்யின் பிகில் படத்தின் கதை இதுதான் என ஒரு கதை இணையத்தில் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தனது தந்தை மற்றும் நண்பனின் மரணத்திற்காக ஒருபக்கம் பழிவாங்கிக்கொண்டே, அவர்களது லட்சியத்திற்காக மகளிர் கால்பந்து அணிக்கு விஜய் பயிற்சி அளிக்கிறார் என்பது தான் பிகில் படத்தின் கதையாம்.
விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் என பெரிய ஆட்கள் எல்லாம் இணைந்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிலும் கடந்த 12ம் தேதி டிரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. விஜய் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகிறார்கள். அதிக லைக்ஸ், வியூஸ் என பிகில் டிரெய்லர் சாதனைகள் பல படைத்து வருகிறது.

அட்லீ என்றாலே இப்டி தான்
இது எல்லாம் ஓருபுறம் இருந்தாலும், பிகிலை கதை திருட்டு சர்ச்சை துரத்திக்கொண்டே இருக்கிறது. பொதுவாக அட்லீ படம் என்றாலே கதை திருட்டு சர்ச்சை வருவது இயல்பு தான். அதுவும் விஜய் - அட்லீ கூட்டணி என்றால் கேட்கவே தேவையில்லை.

கதை திருட்டு சர்ச்சை
அதுபோல் தான் பிகில் படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க ஒருபக்கம் போராடி வருகிறது.

பிகில் கதை
இந்நிலையில் பிகில் படத்தின் கதை என ஒன்று இணையத்தில் உலா வருகிறது. பிகில் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதை வைத்தே இந்த கதையை அவர்கள் பின்னியிருக்கிறார்கள்.

விளையாட்டு அரசியல்
அதாவது, விஜய் ஒரு பெரிய கால்பந்தாட்ட வீரர். அவரது தந்தை லோக்கல் கால்பந்தாட்ட வீரர் தான். வடசென்னையின் பிரபல ரவுடியான அவர் தனது மகனை பெரிய கால்பந்தாட்ட வீரராக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் விளையாட்டில் புகுந்து விளையாடும் அரசியல், அந்த கனவை தகர்க்கிறது.

பழிவாங்கும் விஜய்
இதற்கிடையே கூட இருப்பவர்களாலேயே குழி பறிக்கப்பட்டு வீழ்கிறார் பிகில். அவரது தந்தையும், நண்பர் கதிரும் கொல்லப்படுகிறார்கள். ஒருபக்கம் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற மகளிர் கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டே, மற்றொரு பக்கம் தனது தந்தை மற்றும் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்குகிறார் பிகில்.

உண்மை கதையா?
இப்படி ஒரு கதை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சந்தேகம் தான். இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீசாகிறது. அதற்குள் இன்னும் எத்தனை கதைகள் உலாவரப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











