அமேசானில் பிகில் ரிலீஸ்.. ட்வீட் போட்ட அர்ச்சனாவிடம் கலெக்‌ஷன் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு என நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான பிகில் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தகவல் பிகில் படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 13ம் தேதி பிகில் படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 12ம் தேதியே பிகில் படம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு வந்துள்ளது.

300 கோடி

300 கோடி

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஆனதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த படம் 300 கோடி வசூல் செய்யவில்லை என விஜய் ஹேட்டர்ஸ் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

பிகில் குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் வெளியிட்டு வந்த அர்ச்சனா கல்பாத்தி, விஜய் ரசிகர்கள் பல முறை கேட்டும் இது வரை பிகில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

அர்ச்சனா அப்டேட்

இந்நிலையில், அமேசான் பிரைமில் பிகில் மற்றும் தெலுங்கு வெர்ஷனான விசில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது என்ற அப்டேட்டை கொடுத்துள்ள அர்ச்சனா கல்பாத்தியிடம் மீண்டும் பிகில் கலெக்‌ஷன் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கலெக்‌ஷன் சொல்லுங்க அக்கா

பிகில் படம் அமேசானில் வெளியாகியுள்ள அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அர்ச்சனா கல்பாத்தியிடம், பிகில் கலெக்‌ஷன் சொல்லுங்க அக்கா என இந்த நெட்டிசன் நச்சரிக்க தொடங்கியுள்ளார்.

இது 11வது வாட்டி அர்ச்சு

திரையில் பிகில் படத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் மீண்டும் அமேசான் பிரைம் வழியாக படத்தை பாருங்கள் என அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டுக்கு, இது 11வது வாட்டி அர்ச்சு என மீம் போட்டு கலாய்த்துள்ளார் இந்த ரசிகர்.

விசுல போடு

அர்ச்சனா கல்பாத்தியின் ட்வீட்டை பார்த்த இந்த தளபதி ரசிகர், போடு போடு விசுல போடு வெயிட்டிங் என கமெண்ட் செய்துள்ளார்.

4வது இடம்

4வது இடம்

பிகில் படம் குறித்த ட்வீட்டுகளை போட்டே அர்ச்சனா கல்பாத்தி இந்தியளவில் 2019ல் டாப் ட்விட்டர் ஹேண்டில் பெண்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் எல்லாம் இவருக்கு அடுத்துத் தான்.

வாட்சிங்

பிகில் படம் அமேசான் பிரைமில் வெளியான தகவலை அர்ச்சனா வெளியிட்டுள்ள நிலையில், இந்த ரசிகர், அமேசான் பிரைமில் பிகில் படத்தை பார்ப்பதாக, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X