இணையத்தில் லீக்கான பிகில் படத்தின் டீசர்.. விஜய் ஃபேன்ஸ் வெறித்தனம்!
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் டீசர் இணையத்தில் லீக்காகி விட்டதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பிகில். இந்தப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிகில் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இசை வெளியீட்டு விழா
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

ஃபுட்பால் கிரவுண்ட்
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்டர்நெட்டில் லீக்கானதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வந்துட்டல்ல.. உன்ன மாதிரி ரொம்ப பேரு லட்சியத்தோட இங்க வந்திருக்காங்க என்ற குரல் பின்னணியில் கேட்க, ஃபுட்பால் கிரவுண்டில் உருண்டு வரும் பால் மீது ஒருவர் காலை தூக்கி வைப்பது போன்ற காட்சியும் விசில் சத்தமும் இடம் பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோ
மேலும் டாப் ஆங்கிளில் நகர்பகுதி காண்பிக்கப்பட்டு இன்னும் ரெண்டு நாளில் லேண்டிங்ண்ணா என்ற குரலுடன் முடிகிறது டீசர். இதனை விஜய் ரசிகர்கள் ரைவலாக்கி வருகின்றனர்.

டீசர் லீக்கானதா?
ஏற்கனவே பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்களும் விஜய் பைக் ஓட்டும் காட்சியும் இணையத்தில் லீக்காகி வைரலானது. இந்நிலையில் பிகில் டீசர் லீக்கானதாக தகவல் பரவி வருகிறது.
ட்ரென்ட்டிங்
பிகில் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் #BigilTeaser என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதில் பிகில் டீசருக்காக மரண வெயிட்டிங் என்றும் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபேன்ஸ் வேலையா?
ஆகையால் இது உண்மையான டீசரா அல்லது படக்குழு டீசரை விரைவில் வெளியிட விஜய் ரசிகர்கள் இதுபோன்ற வேலையில் இறங்கியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











