பிகில் தென்றலை பாலிவுட்டுக்கு கூட்டிட்டுப்போன அட்லீ.. ஜவான் படத்தில் இப்படியொரு சம்பவமா!

சென்னை: தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்கினாலும் அதிகப்படியாக இந்தி நடிகர்களே நிறைந்திருப்பார்கள். ஆனால், இயக்குநர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கி உள்ள ஜவான் படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோன் மட்டுமே பாலிவுட் நடிகர்கள் போல உள்ளனர்.

ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் பில்லா, இருமுகன் வைபில் மிரட்டி உள்ளார். வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் உள்ளனர்.

Bigil Thendral fame Amritha Aiyer spotted in Jawan Prevue stuns fans

ஜவான் ப்ரிவ்யூ டிரெய்லர் வெளியான நிலையில், அந்த படம் பல படங்களின் காப்பி என்கிற ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அம்ரிதா அய்யரும் நடித்துள்ளார் என்பதை அவரே ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்: இயக்குநர் அட்லீ இயக்கும் படங்களில் எல்லாமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. ராஜா ராணி படத்தில் நயன்தாரா, நஸ்ரியா கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. தெறி படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் மிரட்டினர். மெர்சல் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்கள் கலக்கினர்.

கடைசியாக வெளியான பிகில் படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கால்பந்து விளையாடும் பெண்கள் அணியின் கோச்சாகவே விஜய் நடித்திருந்தார். இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஏகப்பட்ட பெண் சோல்ஜர்கள் நடித்துள்ளனர். அவங்க ஹீரோ டீமா? அல்லது வில்லன் டீமா? என்பது படம் வந்தால் தான் தெரியும். பிரியமாணி தான் அந்த டீமுக்கு தலைவி என்பது போலத் தெரிகிறது.

பிகில் தென்றல்: பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அம்ரிதா அய்யரும் நயன்தாரா போல கையில் துப்பாக்கியுடன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், அந்த போட்டோவை அவரே ஷேர் செய்து அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டுக்கு சென்று விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Bigil Thendral fame Amritha Aiyer spotted in Jawan Prevue stuns fans

அம்ரிதா அய்யர் எங்கே தமிழ் படங்களில் அதிகம் தென்படவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பாலிவுட்டுக்கு சென்று பெரிய சம்பவமே செய்யப் போகிறார் என்பது தெரிந்ததும் ரொம்பவே சந்தோஷம் அடைந்து அவரை வாழ்த்தி வருகின்றனர்.

கவின் படத்தில்: கவினுடன் ஜோடி போட்டு அம்ரிதா அய்யர் நடித்த லிப்ட் பேய் படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக பிகில் படத்துக்கு பிறகு அமைந்தது. சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அம்ரிதா அய்யர் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் செம ஸ்ட்ராங்கான ரோலில் நடித்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் மேலும், அட்லீ யாரையெல்லாம் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தப் போகிறாரோ என எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X