ரசிகர்கள் மேல் வீசும் தென்றல் போல.. பிகில் அமிர்தா வெளியிட்ட கண் கவர் படங்கள்!
சென்னை: மலையாள சினிமாவில் அறிமுகமான அமிர்தா விற்கு நல்ல அறிமுகம் கொடுத்தது தமிழ் திரையுலகம் தான்.
தமிழில் தனது காந்த குரலால் எல்லோரையும் மயக்கிய விஜய் ஜேசுதாஸ் அறிமுகமான அதே படத்தில் அறிமுகமானவர் தான் இந்த அமிர்தா.
இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

பின்னர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த காளி என்ற படத்தில் நடித்தார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களை பெற்று தந்த திரைப்படம் விஜய் நடித்து இந்த வருடத்தின் மெகா ஹிட் ஆன பிகில் படம் தான். இதில் கால்பந்தாட்ட அணியின் தலைவியாக வருவார்
அமிர்தா.
இதில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி விஜய் மற்றும் அட்லி அவர்களின் பாராட்டை பெற்றார் அமிர்தா.இவரை அமிர்தா என்று கூறினால் கூட தெரியாது.

தென்றல் என்று கூறினால் தெரியாதவர்கள் எவரும் இல்லை. அமிர்தாவிற்கு பிகில் வெற்றியின் மூலம் பல பட வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த அமிர்தா விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் இதில் அவர் பளபளவென்று வெண்னையில் செய்த சிற்பம் போல் உள்ளார் என்றும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் மாளவிகா மோகனன் போல உள்ளார் என்று அமிர்தாவின் ரசிகர்கள் புகைபடங்களை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











