Bigil third Poster: வெளியானது பிகில் 3வது போஸ்டர்.. விஜய் செம கெத்து தான்!
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை: விஜய் பிறந்தநாளையொட்டி, பிகில் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய்யின் 45வது பிறந்தநாள் கொண்டாடத்தின் ஒருபகுதியாக, பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது. அதில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் போஸ் கொடுத்திருந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நான்கு கெட்டப்புகளில் விஜய் செம ஸ்டைலாக இருக்கிறார். விஜய்யின் பெயர் மைக்கேல் என டிசர்ட்டில் உள்ளது. கோட் சூட்டிலும் விஜய் இருக்கிறார்.
இந்நிலையின் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிறைவாக 3வது போஸ்டரையும் சஸ்பென்ஸாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் டிசர்ட்டில், கைலி கட்டிக்கொண்டு கையில் சைக்கிள் செயினுடன் விஜய் நிற்கிறார். விஜய் பேக் போஸில் தெரிகிறார். அவருக்கு முன்னால் நிறைய பேர் ஆயுதங்களுடன் ஓடி வருகிறார்கள். சண்டைக்காட்சிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











