3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்!

Recommended Video

Bigil Spots Found : Trailer பார்த்து கதறி அழுத Robo Shankar-வீடியோ

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள விஜய்யின் பிகில் படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 12ம் தேதி வெளியானது.

ஒரே நாளில் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது மூன்று கோடி பார்வைகளை பிகில் டிரைலர் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது.

பிகில் டிரைலருக்கு இதுவரை 2 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக லைக்குகளை அள்ளிய ஷாரூக்கானின் ஃபேன் பட டிரைலர் சாதனையையும் பிகில் முறியடித்துள்ளது.

சரவெடி சாதனை

சரவெடி சாதனை

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் பிகில். இந்த படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

24 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிகில் டிரைலர் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

மூன்று நாள் ஆகியுள்ள நிலையில், தற்போது 30 மில்லியன் ஹிட்ஸ் அதாவது 3 கோடி பார்வைகளை பிகில் டிரைலர் கடந்துள்ளது.

புள்ளிங்கோ கைவரிசை

புள்ளிங்கோ கைவரிசை

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெறித்தனம் பாடலில் விஜய் பயன்படுத்தியுள்ள புள்ளிங்கோ என்ற வார்த்தை தான் தற்போது யூடியூப் நடத்தும் பலருக்கும் ஸ்க்ரிப்ட் தந்து கொண்டு இருக்கிறது.

பிகில் டிரைலர் வெளியீட்டுக்கு காத்திருந்த புள்ளிங்கோ அந்த டிரைலரை உலக அளவில் டிரெண்டிங் செய்தது மட்டுமின்றி மூன்றே நாட்களில் 3 கோடி பார்வைகளை கடக்கவும் செய்துள்ளனர்.

ஷாருக்கானை பீட் செய்த விஜய்

ஷாருக்கானை பீட் செய்த விஜய்

இந்தியளவில் இதுவரை ஷாருக்கானின் ஃபேன் படத்தின் டிரைலருக்குத் தான் 1.9 மில்லியன் லைக்குகள் கிடைத்திருந்தது. இதனை பிகில் டிரைலர் 2 மில்லியன் லைக்குகளை அதிவிரைவாக அள்ளி ஷாருக்கான் படத்தின் சாதனையை முறியடித்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், உலகளவில் அதிக லைக்குகள் பெற்ற டிரைலர் பட்டியலில் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

3 மணி நேரம்

3 மணி நேரம்

இது வரை வெளியான விஜய் படங்களிலே அதிக நிமிடங்கள் ஓடக்கூடிய விஜய் படமாக பிகில் மாறியுள்ளது. 2 மணி நேரம் 59 நிமிடம் பிகில் படத்தின் நீளம் உள்ளதாக தணிக்கை குழு அளித்த பிகில் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. யு/எ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், விரைவில் பிகில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X