பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்தில் ட்ரெயிலர் புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.
தெறி, மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொண்டாட்டம்
தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது. பிகில் ட்ரெயிலரையே படத்தை போல கொண்டாடினர் விஜய் ரசிகர்கள்.

அள்ளும் வியூஸ்
யூட்யூப்பில் இந்த படத்தின் டிரைலர், தற்போது வரை 1.78 கோடிக்கும் மேற்பட்ட வியூஸ்களை அள்ளியிருக்கிறது. மேலும் இந்த ட்ரெயிலர் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

பிகில் சாதனை
அஜித்தின் விஸ்வாசம் பட ட்ரெய்லர் மொத்தம் பெற்றுள்ள லைக்குகளை விட அதிகம் என கூறப்படுகிறது. பிகில் டிரைலர் செய்துள்ள இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்
மேலும் தென்னிந்திய மொழி படங்களில் பிகில் படம் தான் அதிக லைக்குகளை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை முதலே பிகில் ட்ரெயிலர் தொடர்பான ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்தனர். அந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்ட்டிகில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











