உனக்காக வாழ நினைக்கிறேன்.. உருகி கரையும் பிகில் சிங்கிள் டிராக்.. சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ!

பிகில் படத்தின் உனக்காக பாடல் இன்று மாலை வெளியாகும் என அட்லீ அறிவித்துள்ளார்.

Recommended Video

Bigil Songs | Unakaga Single | Bigil Audio Launch | Vijay| Nayanthara | Atlee

சென்னை: பிகில் படத்தில் இடம்பெற்ற உனக்கான பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இடையில், விவேக் வரிகளில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய், அட்லீ இணையும் படம் பிகில். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அடுத்த மாதம் தீபாவளியையொட்டி இப்படம் ரிலீசாக இருக்கிறது.

இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

அந்நிகழ்ச்சியை வரும் ஞாயிறன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர். எனவே, அதனை அன்றைய தினம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என ஏற்கனவே படக்குழு அறிவித்து விட்டது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளார் இயக்குநர் அட்லீ.

உனக்காக பாடல்

இது தொடர்பாக அவர் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்று மாலை 4.30 மணிக்கு பிகில் படத்தில் இடம் பெற்ற எனக்கு மிகவும் பிடித்த உனக்காக பாடல் வெளியிடப்படும்' என அறிவித்தார். அட்லீயின் இந்த திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய பாடல்

புதிய பாடல்

ஏற்கனவே வெறித்தனம் மற்றும் சிங்கப்பெண்ணே என இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டன. அவற்றிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்போது உனக்காக வாழ நினைக்கிறன் என்று ரொமாண்டிக் பாடல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் மாதிரி

பிக் பாஸ் மாதிரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சொல்வதைப் போல, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என அட்லீ செய்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். அதோடு தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் நயனும், விஜய்யும் உள்ளனர். இது மெர்சல் படத்தை ஞாபகப்படுத்துவதாக அவர்கள் கூறிவருகின்றனர்.

செம பாடல்

செம பாடல்

இந்த பாடலை விவேக் எழுதி இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லுரி ஆகியோர் இந்த பாடலை பாடி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க மெலடியில் இந்த பாடல் கரைந்து உருகி செல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X