இது சரியில்லை.. மொத்தமாக மாத்துங்க.. பிகில் டிரைலர் பார்த்த அட்லீ.. படக்குழுவிற்கு அட்வைஸ்!
பிகில் படத்தின் டிரைலர் கட்டை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் அட்லீக்கு திருப்தி இல்லை என்று கூறுகிறார்கள்.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் டிரைலர் கட்டை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் அட்லீக்கு திருப்தி இல்லை என்று கூறுகிறார்கள்.
பிகில் படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது. செம திரில்லர் ஸ்ப்போர்ட்ஸ் ஜானரில், படம் நிறைய டிவிஸ்ட் மற்றும் சென்டிமென்ட் உடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக கடந்த வாரம் வரை ஐந்து போஸ்டர்கள் வெளியானது. பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

என்ன சிக்கல்
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு பின் படத்தின் டிரைலர் வரும் சனிக்கிழமை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் ஆடியோ மிக்சிங் வேலைகள் தற்போது நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் என்ன
இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரமே வெளியாக வேண்டியது. அப்போது டிரைலர் கட் ஒன்றும் தயாராகிவிட்டது என்கிறார்கள். ஆனால் ஆடியோ மிக்சிங்கில் சில குளறுபடிகள் நடந்து இருக்கிறது.

அட்லீ
இதையடுத்து டிரைலர் பார்த்த அட்லீ டிரைலர் பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். படத்தின் சில முக்கியமான காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுவதாக கூறியுள்ளார். ஆடியோ மிக்சிங் குறித்தும் அறிவுரை வழங்கி உள்ளார்.

மீண்டும் செய்தனர்
ஆகவே மீண்டும் புதிதாக டிரைலரை தயாரித்து உள்ளனர். இது வீடியோ கட் மொத்தமாக முடிந்துவிட்டது. இதனால் தற்போது ஆடியோ மிக்சிங் செய்வதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதுதான் படத்தின் டிரைலர் தாமதமாக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











